புதிய ஆளுநராக பர்னாலா இன்று பதவியேற்பு
சென்னை:
கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநராக சுர்ஜித்சிங் பர்னாலா இன்று பதவி ஏற்கிறார்.
பர்னாலா ஏற்கெனவே 1989-91 திமுக ஆட்சியில் தமிழக ஆளுநராக இருந்தார். 1991-ல் திமுக அரசைக் கலைக்க அப்போதைய மத்தியஅரசு நிர்பந்தித்தபோது அதை அவர் ஏற்கவில்லை.
இருப்பினும் குடியரசுத் தலைவர் மூலமாக திமுக அரசை மத்திய அரசு கலைத்தது. இதனையடுத்து தமது பதவியை பர்னாலா ராஜிநாமாசெய்தார்.
இந் நிலையில் இப்போது இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக பர்னாலா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலைஹைதராபாத்தில் இருந்து தமிழக அரசின் விமானம் மூலம் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்புஅளிக்கப்படுகிறது.
பின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், பர்னாலாவுக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷண்ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!












Click it and Unblock the Notifications