வறட்சி: தமிழகத்திற்கு ரூ. 156 கோடி ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை& தஞ்சாவூர்:

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணப் பணிகளுக்காக ரூ. 156.84 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் நிலவும் வறட்சியை போக்குவதற்கும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ. 1,909 கோடி நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா பிரதமர்மன்மோகன் சிங்கிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய ஆய்வுக் குழு தமிழகம் வந்து வறட்சி நிலையை ஆய்வு செய்தது. அப்போதுதமிழகத்திற்கு கூடுதலாக ரூ.223.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கைவிடுத்தது. ஆய்வுக்குப் பின் அக்குழு டெல்லி சென்று வறட்சி நிவாரண உயர் மட்டக் குழுவிடம் அறிக்கைசமர்ப்பித்தது.

இந்த அறிக்கை கடந்த 27ம் தேதி உயர் மட்டக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்திற்குதேசிய துயர் துடைப்பு நிதியிலிருந்து உடனடியாக ரூ. 156.84 கோடி நிதி ஒதுக்கவும், 1.5 லட்சம் மெட்ரிக் டன்உணவு தானியங்களை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதில், சென்னை குடிநீர்ப் பிரச்சினைக்காக ரூ. 89.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்தியஅரசுதெரிவித்துள்ளது.

வறட்சி நிவாரண நிலையை மத்திய குழு ஆய்வு செய்ய வந்தபோது கனத்த மழை பெய்ததும், தற்போது தமிழகம்முழுவதும் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து, அணைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் நிரம்பிவழிவதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளம் வடிகிறது

இந் நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் கன மழை காரணமாக தேங்கியுள்ள வெள்ளநீர் படிப்படியாக வடிந்துவருகிறது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காவிரிடெல்டாப் பகுதி மாவட்டங்களில் பல கிராமங்கள், லட்சக்கணக்கான ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கின.

இந்தப் பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தஞ்சைமாவட்டம் மாங்குடி, கபிஸ்தலம், கும்பகோணம், கொடியமங்கலம் ஆகிய கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராதாகிருஷ்ணன் சுற்றிப் பார்த்து தண்ணீரை வெளியேற்றும் பணியை பார்வையிட்டார்.

தற்போது மழை சற்று ஓய்ந்துள்ளதால் கிராமங்கள், வயல்களில் தேங்கியுள்ள வெளளநீர் வடிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+