கல்விக்கு கடன்: தனி வாரியம் கோரும் ராமதாஸ்
சென்னை:
ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க தனிவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு காலியாக உள்ள சுமார் 37,000 இடங்களை நிரப்புவதற்கு ஒரு புதிய திட்டத்தைவகுக்குமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நாளை இதற்கான திட்டத்தை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகஅரசு வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளதார்.
கடந்த சில ஆண்டுகளாக அமலில் இருந்த கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அரசு திடீரென உயர்த்தியது.இதனால் 15% இட ஒதுக்கீடும் இல்லாமல் போய், கிராமப்புற மாணவர்கள் முந்தைய ஆண்டுகளைப் போல பொறியியல்கல்லூரிகளில் சேர முடியாத அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. அதோடு கட்டணமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
காலியிடங்களைக் குறைக்க ஒரே வழி கட்டணங்களை குறைப்பதுதான். மாணவர் சேர்க்கை தகுதி அடிப்படையில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம் கட்டண விகிதம் நியாயமான அடிப்படையில் இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க அரசாங்கமே தனி வாரியங்களைஅமைத்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு வட்டியில்லாமலும், மற்றவர்களுக்கு எளிய வட்டி விகிதத்திலும் கல்விக் கடன்வழங்கி வருகிறார்கள்.
அதேபோல் தமிழக அரசும் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க தனி வாரியம் அமைக்க முன்வர வேண்டும். அரசுநாளை உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப் போகும் புதிய திட்டத்தில் இவையெல்லாம் இடம் பெறும் என்று ஏழை மாணவர்கள்எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications