வீராணம்: நிலத்தடி நீரை எடுக்க தடை கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய வீராணம் திட்டத்திற்காக தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர குழாய்கள் பதிக்கப்பட்டன. வறட்சி காரணமாக வீராணம் ஏரியில்தண்ணீர் வறண்டது. இதனால் சேத்தியாத்தோப்பு முதல் பண்ருட்டி வரை 45 ஆழ்குழாய் கிணறுகளை குடிநீர் வாரியம் அமைத்தது.

இதற்கு கடலூர், சிதம்பரம் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது கொள்ளிடம் ஆற்றின் கீழ்அணை அருகேநிலத்தடி நீரை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. ரூ.300 கோடி செலவில் 6 இடங்களில் மிகப்பெரிய ஆழ்குழாய் கிணறுகள்தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே கொள்ளிடம் ஆறு அருகே ஆழ்குழாய் கிணறுகளைஅமைத்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை விசாரிக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.

அதுவரை கொள்ளிடம் அருகே ஆழ்குழாய் கிணறுகளை அமைத்துத் தண்ணீர் எடுக்க அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் இது குறித்து பதில் தருமாறு தமிழகஅரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+