வீரப்பனை பிடிக்க உதவிய பெண் ஜோதிடர்
மேட்டூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனை காட்டிற்குள் இருந்து வெளியே வரவழைக்க பெண் ஜோதிடர் ஒருவரின் உதவியை அதிரடிப்படைநாடியது இப்போது தெரியவந்துள்ளது.
வீரப்பனை காட்டிற்குள் இருந்து வெளியே கொண்டு வர அதிரடிப்படை பலவகையிலும் முயற்சித்தது. வீரப்பன் தனக்கு ஏற்படும்உடல்நலக் குறைவுகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னை, மதுரை, சேலம், தர்மபுரி ஆகிய இடங்களைச் சேர்ந்த சில டாக்டர்களுடன்ரகசியத் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.
இவர்களைப் பயன்படுத்தி வீரப்பனை மடக்க அதிரடிப்படையினர் திட்டம் தீட்டினார்கள். டாக்டர்கள் மூலம் மயக்க மருந்துகொடுத்து, வீரப்பனை பிடிப்பதுதான் திட்டம். டாக்டர்கள் ஒத்துழைப்பு கொடுக்காததால், இந்த திட்டம் நிறைவேறவில்லை.
வீரப்பன் ஜோதிடத்தில் அபார நம்பிக்கை வைத்திருந்தது அதிரடிப்படைக்குத் தெரியும். இந் நிலையில் வீரப்பனுக்கு ஜோதிடம்பார்த்து வந்த பெண்ணை அதிரடிப்படையினர் மடக்கியுள்ளனர். வீரப்பனின் ஜாதகத்தை வைத்து அவனது இன்பார்மர்கள் மூலம்ஜோதிடம் சொல்லி வந்துள்ளார் இப் பெண். நேரடியாக இவர் வீரப்பனை சந்தித்தாகத் தெரியவில்லை.
கண்புரை சிகிச்சைக்காக தர்மபுரி டாக்டரிடம் சிகிச்சை பெற காட்டை விட்டு வெளியே போகலாமா என்று வீரப்பன் அந்தப்பெண்ணிடம் ஜோதிடம் கேட்டபோது, செல்லலாம் என்று தகவல் அனுப்பும்படி அதிரடிப்படையினர் அப் பெண்ணிடம்கூறியுள்ளனர்.
அந்த பெண் ஜோதிடரும், சிகிச்சைக்கு வரலாம் என்றும், ஆனால் எதிரிகளால் ஆபத்து இருக்கிறது; கவனமாக இருங்கள் என்றும்ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். இதையடுத்தே வீரப்பன் தனது கூட்டாளிகளுடன் சிகிச்சைக்கு புறப்பட்டான்.அதிரடிப்படையிடம் மாட்டிக் கொண்டான்.
முத்துலட்சுமி பேட்டி:
இந் நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி நிருபர்களிடம் பேசுகையில்,
வீரப்பன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு ஏராளமான பேர்கள் தினசரி வந்து செல்கிறார்கள். இது அவருக்கு மக்கள் மத்தியில்இருக்கும் செல்வாக்கையே காட்டுகிறது.
வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைப்பது குறித்து ஒரு வருடம் ஆன பிறகு முடிவு செய்யப்படும்என்றார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications