வீரப்பன் புதையலை தேடியவர் யானை மிதித்து பலி
பென்னாகரம்:
சந்தனக்கடத்தல் வீரப்பனின் புதையலைத் தேடிச் சென்றவர் யானை மிதித்து பலியானார்.
வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு, அவன் காட்டுக்குள் புதைத்து வைத்துள்ள ரூ.20 கோடிக்கும் அதிகமான பணத்தை காட்டுப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ரகசியமாக தேடி வருகின்றனர்.
யாரும் காட்டுக்குள் சென்று வீரப்பன் புதையலைத் தேட வேண்டாம் என்று அதிரடிப்படையினரும் போலீசாரும் எச்சரிக்கைவிடுத்து வருகின்றனர். ஆனால், அதை பெரும்பாலானவர்கள் மதித்ததாகத் தெரியவில்லை.
எச்சரிக்கையையும் மீறி மலையோர கிராம மக்கள் பலர் காட்டுக்குள் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். அவ்வாறுபுதையல் எடுக்கப் போன ஒருவர் யானையிடம் சிக்கி, மிதிபட்டு இறந்துள்ளார். அவரது உடலை கொள்ளாசமுத்திரம் பட்டிகிராமம் அருகே கோதாணி மடுவு என்ற இடத்தில் அழுகிய நிலையில் போலீஸார் கைப்பற்றினர்.
பண்ணை வீட்டில் ராஜ்குமார் மனைவி:
இதற்கிடையே வீரப்பன் மறைவையடுத்து முதன்முறையாக வனப் பகுதியில் உள்ள தங்களது பண்ணை வீட்டுக்கு கன்னட நடிகர்ராஜ்குமாரின் குடும்பம் சென்றுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள வன கிராமமான தொட்டகாஜனூரில் உள்ள இந்த பணணை வீட்டில் இருந்து தான்ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றான்.
இதையடுத்து இந்த வீட்டுப் பக்கமே ராஜ்குமார் குடும்பத்தினர் தலைவைத்துப் படுக்கவில்லை. இப்போது வீரப்பன் போய்ச்சேர்ந்துவிட்டதால், இந்த வீட்டுக்கு ராஜ்குமாரின் மனைவியும் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் வந்து சென்றனர்.
இந்த தொட்டகாஜனூர் தான் ராஜ்குமாரின் சொந்த ஊராகும்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications