ரிலையன்ஸ் போன்களை துண்டித்த பி.எஸ்.என்.எல்
டெல்லி:
-ரூ.500 கோடி பாக்கி காரணமாக தமிழகம் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின்தொலைபேசிகளுடனான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் தனது சந்தாதாரர்களுக்கு உள்ளூர் கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு தொலைபேசி இணைப்பு கொடுத்து வந்ததைபி.எஸ்.என்.எல். நிறுவனம் கண்டுபிடித்தது. இதனால் பி.எஸ்.என்.எல்க்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதற்கு நஷ்டஈடாக ரூ.500 கோடி செலுத்த வேண்டும் என ரிலையன்சுக்கு பி.எஸ்.என்.எல். நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனை எதிர்த்து ரிலையன்ஸ் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. அந்த வழக்கில் பி.எஸ்.என்.எல்நிறுவனத்திற்குச் சாதகமாக டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் ரூ 500 கோடியை செலுத்த தவறினால் பி.எஸ்.என்.எல்.- ரிலையன்ஸ் இடையிலானதொடர்புகளை துண்டித்து விடுவோம் என பி.எஸ்.என்.எல். விற்பனை பிரிவு இயக்குநர் மங்களா தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சென்னை, பெங்களூர், நாசிக் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் தவிர, நாடு முழுவதுமே ரிலையன்ஸ்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக ரிலையன்ஸ் கூறியுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 5 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். ரிலையன்சுக்கு 90 லட்சம் சந்தாதாரர்கள்உள்ளனர். இப்போது இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பி.எஸ்.என்.எல். தொலைபேசியில் இருந்து ரிலையன்சுக்கும்,ரிலையன்சில் இருந்து பி.எஸ்.என்.எல்லுக்கும் தொடர்பு கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications