ஜெவுக்கு திமுக சிம்ம சொப்பனம்: கருணாநிதி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவிற்கு திமுக சிம்ம சொப்பனமாக விளங்குவதாக அக் கட்சித் தலைவர் கருணாநிதி கூறினார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பெட்ரோல் விலை உயர்வாக இருந்தாலும், அதிரடிப்படையினருக்குப் பாராட்டாக இருந்தாலும் திமுகவைக் குறைகூறுவதைஜெயலலிதா வழக்கமாகக் கொண்டுள்ளார். அவருக்கு திமுக சிம்ம சொப்பனமாக இருப்பதே இதற்குக் காரணம் ஆகும்.
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் தொலைபேசியில் பேசியதை தலைமைச் செயலாளரிடமும், உச்சநீதிமன்றத்திலும் மட்டுமே கூறியதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அரசியல் சட்டத்தை அறியாமல் எதிர்க்கட்சிகளும்,பத்திரிக்கைகளும் குறை சொல்வதாக அவர் கூறியுள்ளார்.
அவர் குறிப்பிடும் சட்டத்தில், அமைச்சர் என்ற முறையில் எனக்குத் தெரிவிக்கப்பட்ட அல்லது என்னுடைய பரிசீலனைக்கு வந்தஎந்தவொரு விஷயத்தையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாருக்கும் தெரிவிக்க மாட்டேன் என்றும்கூறப்பட்டுள்ளது.
எனவே, இது ரகசியமானதல்ல என்றோ, தலைமைச் செயலாளருக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும்தான் தெரிவித்தேன் என்றோகூறுவது தவறாகும்.
புதிய ஆளுநராக பர்னாலா பதவியேற்ற நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் இரவில்தான் எனக்கு அழைப்பிதழ் கிடைத்தது. அதுவும்நிகழ்ச்சியில் 7-ம் வரிசையில் எனக்கு நாற்காலி போட்டிருந்தார்கள்.
எந்த ஆளுநர் வேண்டாம் என்பதில் திமுகவுக்கு அக்கறை இருந்ததில்லை. ஆனால் ஆளுநர் வாய்மை உடையவராக இருக்கவேண்டும் என்று திமுக விரும்புகிறது.
ஆளுநர் பதவியே வேண்டாம் என்ற திமுகவின் ஆரம்ப காலக் கருத்தில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அப் பதவிஇருக்கும் வரையில் அப் பதவியில் அமருபவர்கள் பண்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும் என்று திமுக கூறுவதில்முரண்பாடு ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications