இன்று ஜெ.வுக்கு திரையலகின் பாராட்டு விழா
சென்னை:
திரைத்துறைக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் இன்றுபிரமாண்டமான பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருட்டு விசிடி ஒழிப்பு, படப்பிடிப்புக் கட்டணம், திரையரங்கக் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழகஅரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்த் திரையுலகின் அனைத்து சங்கங்களும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளன.
இந் நிலையில் தமிழ்த் திரையுலகின் அனைத்து சங்கங்களும் இணைந்து இன்று சென்னையில் ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழாநடத்துகின்றன. நேரு உள் விளையாட்டரங்கில் இன்று மாலை பாராட்டு விழா நடைபெறுகிறது.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகின் அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்கிறார்கள்.பாராட்டு விழா குறித்த விவரங்களை திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளிதரன் மற்றும் நடிகர் சங்கத் தலைவர்விஜயகாந்த் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
நிகழ்ச்சிக்கு இயக்குநர் கே.பாலச்சந்தர் தலைமை தாங்குகிறார். விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் பொருளாளர் எல்.சுரேஷ்வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
விழாவின் தொடக்கமாக முன்னணி பின்னணிப் பாடகர்கள் அனைவரும் இணைந்து தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுகின்றனர்.குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதன் பின்னர் கலை நிகழ்ச்சிகள்தொடங்குகின்றன.
கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் தனுஷ், ஷாம், ஜெயம் ரவி, இயக்குநர் சூர்யா, துஷ்ய்ந்த், சிபி, பாய்ஸ் பரத், பாய்ஸ் மணிகண்டன்,ஸ்ரீமன், விக்னேஷ், கருணாஸ் ஆகியோரும், நடிகைகள் ரோஜா, தேவயானி, ரீமா சென், சிந்து துலானி, மும்தாஜ், ஸ்வாதி,விந்தியா, சாயா சிங், தேஜாஸ்ஸ்ரீ, விந்தியா, சங்கீதா, அபர்ணா, மதுமதி ஆகியோரும் கலந்து கொண்டு நடனமாடுகின்றனர்.
இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர், தேவா, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் இசையமைப்பில் ஜெயலலிதாவைவாழ்த்தும் பாடல்கள் பாடப்படுகின்றன. வித்யாசாகர் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா உள்ளிட்ட 17 பாடகர்கள்பாடியுள்ளனர்.
இசையமைப்பாளர் ஆதித்யன் இசையமைப்பில், பழைய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படப் பாடல்கள் ரீமிக்ஸ் செய்துபாடப்படவுள்ளன. இதற்கு நடிகர், நடிகைகள் ஆடுகிறார்கள். நடனங்களை சிவசங்கர், தாரா, கூல் ஜெயந்த், திணேஷ், அசோக்ராஜ், ராபர்ட் டி.கே.எஸ்.பாபு ஆகியோர் அமைத்துள்ளனர்.
பார்த்திபன்-வடிவேலு-எஸ்.வி.சேகர் இணைந்து காமடி நாடகம் நடத்துகிறார்கள். சண்டைப் பயிற்சிக் கலைஞர்கள் பங்கேற்கும்சாகச நிகழ்ச்சிகளும் செய்து காட்டப்படவுள்ளன.
ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தும் வகையில் முன்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்சங்கம் தயாரித்த பாடல் விழாவின்போது திரையிடப்படும். இதில் மும்தாஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கலை நிகழ்ச்சிகளின் இறுதியாக ஜெயலலிதாவுக்கு திரையுலகின் 54 சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பிரமாண்ட மாலையும்,பொன்னாடையும் அணிவிக்கிறார்கள்.
அதன் பின்னர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விக்ரம், பிரபு, ராதாரவி, பார்த்திபன், விஜய், நடிகைகள்மனோரமா, சரோஜாதேவி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.
அதன் பின்னர் ஜெயலலிதா ஏற்புரை நிகழ்த்துகிறார். இறுதியில் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்நன்றியுரை நிகழ்த்துவார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications