மீனாட்சி கோவில் அர்ச்சகரிடம் சிபிஐ விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை:-

Jayalakshmiதிருமங்கலம் இன்ஸ்பெக்டர் மலைச்சாமிக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே நடந்த திருமணம் குறித்து திருமங்கலம் மீனாட்சிஅம்மன் கோவில் அர்ச்சகரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீது பாலியல் புகார்களைக் கூறியுள்ள ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

ஜெயலட்சுமி கணக்கு வைத்திருந்த வங்கிகள், ஜெயலட்சுமியிடம் 10 நாள் விசாரணை, அவரது பெற்றோரிடம் விசாரணை, அவர்பாக்கி வைத்திருந்த தொலைபேசி நிறுவனங்களில் விசாரணை என சிபிஐ விரிவாகவே விசாரித்து வருகிறது.

இந் நிலையில் ஜெயலட்சுமி புகார் கூறிய காவல்துறை அதிகாரிகள் குறித்த விசாரணையை சிபிஐ அதிகாரிகள்தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக டி.எஸ்.பி. ராஜசேகருக்கும் ஜெயலட்சுமிக்கும் திருமணம் நடந்தபோது உடன் இருந்ததாகக்கருதப்படும் ஒரு போலீஸ்காரரை சிபிஐ நேற்று நேரில் அழைத்து விசாரித்தது.

இதையடுத்து திருமங்கலத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கிளைக் கோவிலுக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கு அர்ச்சகர்சங்கரநாராயணனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த அர்ச்சகர் முன்னிலையில், இந்தக் கோவிலில் தான் திருமங்கலம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தனக்குத் தாலிகட்டியதாக சிபிஐயிடம் தந்த வாக்குமூலத்தில் ஜெயலட்சுமி கூறியிருந்தார். இதையடுத்து இந்த விசாரணை நடந்தது.

Jayalakshmiசுமார் ஒரு மணிநேர விசாரணைக்குப் பின்னர் சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினர். விசாரணை குறித்த விவரங்களை சிபிஐஅதிகாரிகளும், அர்ச்சகரும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

திண்டுக்கல்லில் போலீசாரிடம் விசாரணை:

இதேபோல திண்டுக்கல்லில் ஜெயலட்சுமி தங்கியிருந்த வேதாத்திரி நகர் வீட்டின் உரிமையாளர் மற்றும் அங்குள்ள ஒருகந்துவட்டிக் கும்பலிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.

டி.எஸ்.பி. ராஜசேகர் தான் ஜெயலட்சுமிக்கு வீடு பிடித்து திண்டுக்கல்லில் தங்க வைத்தார். அத்தோடு, தனது லஞ்சப் பணத்தைஜெயலட்சுமி மூூலம் கந்து வட்டிக் கும்பலிடம் தந்து வட்டிக்கு விட்டார்.

மேலும் ராஜசேகர் உத்தரவுப்படி ஜெயலட்சுமி வீட்டில் எடுபிடி வேலை பார்த்த போலீஸ்காரர்களான பாண்டி, வீரபாண்டி,சக்திவேல், பரமசாமி, நடராஜன் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்படியே ராஜசேகரின் மனைவிதற்கொலை தொடர்பாகவும் விசாரணை நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+