கைதான மாணவர்களின் பெற்றோர் கலாமுக்கு கடிதம்
பாண்டிச்சேரி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கைது செய்யப்பட்ட புதுவை மாணவர்களின்பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை மன்னிக்கும்படி கோரி கலாமுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
புதுவை பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அப்துல் கலாம் கடந்த 1-ம் தேதி புதுவை வந்தபோது, அவரைகொலை செய்வோம் என்று காவல்துறை அதிகாரிக்கு மிரட்டல் கடிதத்துடன் கேசட் வந்தது.
இது குறித்து உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக புதுவையில் உள்ளதனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களான கொசப்பாளையம் ராஜேஷ் (18), உருளையன்பேட்டை செங்கேணி (19)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இல்லை எனவும்,விளையாட்டுத்தனமாகவே இந்த காரியத்தில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்தது.
இருப்பினும் இருவர் மீதும் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்போது இருவரும் புதுவைமத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந் நிலையில் ராஜேசின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, செங்கேணியின் தந்தை சிவராஜ் ஆகியோர் கலாமுக்கு தங்கள் மகனைமன்னிக்கும்படி கடிதம் எழுதி உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:
அப்துல் கலாம் அவர்களே, நீங்கள் மாணவர்கள் மீது அதிக பாசமும், நேசமும் உடையவர். எங்கள் மகன்கள்விளையாட்டுத்தனமாக இது போல் தவறான செயல்களில் ஈடுபட்டு விட்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால்மீண்டும் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கருணை உள்ளம் கொண்ட தாங்கள் எங்கள் பிள்ளைகளை விடுதலை செய்ய தயவு செய்து இரக்கம் காட்ட வேண்டும். அவர்கள்இனிமேல் இது போன்ற காரியங்களில் ஈடுபட மாட்டார்கள். தாங்கள் அவர்களை மன்னிக்க வேண்டுகிறோம் என்றுகூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications