முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி பாமக மாநாடு
சென்னை:
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக விரைவில்மாநாடு நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
பாமக சார்பில் சென்னையில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:
கல்வி மற்றும் பொருளாதார நிலையில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியிருப்பதாக தேசிய மாதிரி சர்வே என்னும் அரசு அமைப்புசொல்கிறது. படித்த முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை 0.1 சதவீதம்தான் என்று அந்த சர்வே கூறுகிறது.
முஸ்லீம்களுக்கு எதுவும் தரக்கூடாது என்று சொல்லும் கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தோடு இருக்க வேண்டிய நிர்பந்தம்எங்களுக்கும் இருந்தது. பின்னர் அக்கூட்டத்தைவிட்டு வெளியேறிவிட்டோம். இனி அவர்களோடு ஒருபோதும் சேர மாட்டோம்.
எல்லா துறையிலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நான்விவாதித்தேன். அப்போது காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஹமது படேலும் உடன் இருந்தார். இவ்விஷயம் குறித்துமீண்டும் சோனியா காந்தியிடம் பேசுவேன்.
டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் இட ஒதுக்கீடு மாநாடு நடைபெறும். மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர்பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்கள்தான். நம்மை யாரும் பிளவுபடுத்த முடியாது. இதை கடைசிவரை பாமக பின்பற்றும்.உங்கள் பிரச்சினைக்காக எப்போதும் குரல் நான் கொடுப்பேன் என்றார் ராமதாஸ்.
பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஹைதர் அலி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications