குற்றாலம் அருவிகளில் வரலாறு காணாத வெள்ளம்!
தென்காசி:
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெரும் வெள்ளத்தில் தடுப்புக் கம்பிகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. வட கிழக்குப் பருவ மழை தமிழகம்முழுவதும் படு தீவிரமாக உள்ளது. மாநலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து பெய்யும் கன மழையால் அப் பகுதிகளையொட்டிய அருவிகளில் வெள்ளம்கொட்டுகிறது.
குறிப்பாக குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இதுவரை வரலாறு காணாத அளவுக்குநீர் கொட்டுகிறது. மெயின் அருவியில் பேரிரைச்சலுடன் கொட்டும் தண்ணீரைப் பார்க்கவே அச்சமூட்டுவதாக உள்ளது.
மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்குமிடத்தில் இருந்த தடுப்புக் கம்பிகள் வெள்ளத்தின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
இதனால் குற்றால அருவிகளில் குளிக்க பொது மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் அருவிக்குஅருகே கூட செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீருடன், கற்களும் பெரும் வேகத்தில் வந்து விழுவதால் ஆபத்து மிக அதிகமாக உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
குற்றாலத்தில் இதுவரை இந்த அளவுக்கு வெள்ளப் பெருக்க ஏற்பட்டதில்லை என அவ்வூர்வாசிகளே கூறுகிறார்கள்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications