கொலையாளிகளுக்கு ரூ. 7 லட்சம் தந்த காஞ்சி மடம்?

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனை கொலை செய்த கூலிப் படையினர் ஜெயேந்திரருக்குஎதிராக போலீசிடம் மிக வலுவான வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும் கொலையாளிகளுக்கு சங்கர மடத்தில் இருந்து ரூ. 7 லட்சம் வரை தரப்பட்டதற்கான வங்கி ஆதாரமும்போலீசாரிடம் சிக்கியுள்ளது.

செப்டம்பர் 3ம் தேதி அவர் கோவில் வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டார்.ஆனால், கொலை நடந்து 1 மாதமாகியும் யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால் பலத்த சர்ச்சை எழுந்தது.

இந் நிலையில் குற்றவாளிகள் என்று கூறி 5 பேரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் அவர்கள்உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று தெரியவந்தது. இதனால் போலீசார் மீது சந்தேகப் பார்வை மேலும்அதிகரித்தது.

இதையடுத்து தான் உண்மையான குற்றவாளிகள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்டவிசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த 9ம் தேதி அவர்களில் 2 பேர் கொடுத்த வாக்குமூலத்தின்படி, காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரருக்கும், இந்தகொலைக்கும் மிகப் பெரும் தொடர்பு உள்ளது தெரியவந்தது.

இவர்கள் கொடுத்த தகவலை வைத்து மேலும் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வங்கி டிரான்சாக்ஷன்:

சங்கரராமன் கொலையில் காஞ்சி மடத்திற்கு முக்கியப் பங்கு இருப்பதாகவும் இந்தக் கொலைக்காக தங்களுக்கு ரூ.7 லட்சம் கூலி தரப்பட்டதாகவும் கொலையாளிகள் இருவர் போலீசாரிடம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து மடத்தின் வங்கிக் கணக்கு வழக்குகளை போலீசார் ரகசியமாக ஆராய்ந்தனர். கொலையாளிகள்சொன்ன தேதியில் வங்கியில் எடுக்கப்பட்ட பணம், அது யாரிடம் தரப்பட்டது போன்ற விவரங்களை போலீசார்சேகரித்தனர்.

ஆதாரங்கள் வலுவான பிறகே சங்கராச்சாரியாரைக் கைது செய்ய முடிவு செய்தார் எஸ்.பி.பிரேம்குமார் என்கிறார்கள். இந்தஆதாரங்களைத் திரட்டும் பணியில் எஸ்.பியே நேரடியாகக் களத்தில் இறங்கி செயல்பட்டார் என்கிறது காவல்துறை வட்டாராம்.

இந்த எஸ்பிக்குப் பயந்து தான் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ம.க எம்எல்ஏ வேல்முருகன் தலைமைறைவாகி டெல்லிக்குஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்கிய பின்னரே தமிழகத்துக்குள் திரும்பவும் காலடி எடுத்து வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+