தி.க- இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அடிதடி!
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் திராவிடர் கழகத்தினருக்கும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியினருக்கும் இடையே அடிதடி நடந்தது.
ஜெயேந்திரரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதையடுத்து இந்து முன்னணியினரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும்ஏராளமான அளவில் நீதிமன்ற வளாகத்தில் கூடினர். இதே போல திராவிடர் கழகத்தினர் சிலரும் கூடியிருந்தனர்.
விசாரணை நடந்து கொண்டிருந்த நீதிமன்ற அறைக்கு வெளியே அவர்கள் அளவில் கூடியிருந்தனர். ஏராளமான வழக்கறிஞர்களும் அங்குகூடி நின்றனர்.
இந் நிலையில் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை நீதிபதி புதன்கிழமைக்கு ஒத்திவைத்தவுடன் அரசுக்கு எதிராக இந்துமுன்னணியினர் கோஷமிட்டனர். இதையடுத்து திராவிடர் கழகத்தினர் சங்கராச்சாரியாருக்கு எதிராக கோஷமிட்டனர். வழக்கறிஞர்கள்நீதிபதியின் தீர்ப்பை வரவேற்றும் சங்கராச்சாரியாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் இந்து முன்னணியினருக்கும் திராவிடர் கழகத்தினரும் இடையே கைகலப்புஏற்பட்டது. தி.கிவினருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் சிலரும் களத்தில் இறங்கி அடித்துக் கொண்டனர்.
இதில் 3 வழக்கறிஞர் காயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அங்கிருந்துவெளியேற்றினர். இந்து முன்னணியின் வட சென்னை தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.
-
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications