ஜெயேந்திரர் மீது ஏற்கனவே 3 வழக்குகள்
சென்னை:
| காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இந்த விசாரணையின் போது காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவிஷ்ணுகாஞ்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எஸ்.பி.சக்திவேலு ஒரு விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: முந்தைய மடாதிபதியும், மகாப் பெரியவர் என்று அழைக்கப்பட்டவருமான சந்திரசேகரேந்திரசரஸ்வதி சுவாமிகளின் தீவிர சிஷ்யர்கள் என்றாலே ஜெயேந்திரருக்குப் பிடிக்காது. அந்தக் காரணத்தால்தான் சங்கரராமன் கொலைசெய்யப்பட்டுள்ளார். |
இதுதொடர்பாக விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் ஜெயேந்திரர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.இதேபோல மிரட்டல் உள்ளிட்ட மேலும் 2 வழக்குகளும் ஜெயேந்திரர் மீது நிலுவையில் உள்ளது.
ஜெயேந்திரரை இப்போது ஜாமீனில் விடக் கூடாது. அப்படியே விட்டால் அவரால் சாட்சிகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும். இந்தவழக்கு தொடர்பான பல சாட்சிகள் குற்றவியல் சட்டம் 164ன் கீழ் சாட்சியம் அளிக்கத் தயாராக உள்ளனர். ஆனால் சங்கராச்சாரியார்வெளியே வந்து விட்டால் அவர்கள் சாட்சியம் அளிக்க தயங்கும் நிலை ஏற்படும்.
சங்கராச்சாரியாருக்கும், குண்டர்கள், ரெளடிகளுக்கும் தொடர்பு இருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாலும், ஏற்கனவே அவர்இதுபோன்ற மிரட்டல் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாலும், சாட்சிகள் தங்களது உயிர் குறித்து அஞ்சும் நிலை உருவாகும்.
இந்த வழக்கு தொடர்பான பல சாட்சிகளை இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சங்கர மடத்தில்உள்ளனர். அவர்கள் ஜெயேந்திரரின் நிழலில்தான் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது. எனவே ஜெயேந்திரர் வெளியே வந்தால் இவர்கள்நிச்சயம் சாட்சியம் சொல்ல மாட்டார்கள்.
ஏற்கனவே சங்கரராமன் குடும்பத்தினரை மனுதாரர் தரப்பில் சிலர் மிரட்டியுள்ளதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. இதுதொடர்பானஆதாரங்களும் எங்களிடம் உள்ளன என்று இன்ஸ்பெக்டர் சக்திவேலு தனது விளக்க மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications