சிறையில் எப்படி இருக்கிறார் ஜெயேந்திரர்?
வேலூர்:
| சிறை வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழகி வருகிறார் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரர் வேலூர்மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலில் சிறை அறைக்குள் செல்ல அவர் மறுத்ததால், சிறைக் கண்காணிப்பாளர் அறையில் பகல் முழுவதும் அமரவைக்கப்பட்டார். பின்னர் இரவில் தனி அறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் இரவு அவர் தங்கினார். தற்போது தொடர்ந்து அந்த தனி அறையிலேயே தங்கியுள்ளார். தினசரி 3 வேளை பூஜை செய்ய அவருக்குஅனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செய்யும் பூஜைகளை அவர் செய்து வருகிறார். |
தற்போது மழைக் காலம் என்பதால் சிறைக்குள் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் ஜெயேந்திரருக்கு கம்பளிப் போர்வைகள்வழங்கப்பட்டுள்ளன. சிறைக்குள் வந்தபோது மிகவும் அமைதியாகவும், இறுக்கமாகவும் காணப்பட்ட ஜெயேந்திரர் முகத்தில்தற்போது இறுக்கம் குறைந்திருப்பதாக சிறை வட்டாரம் தெரிவிக்கிறது.
வேலூர் சிறையில் ஜெயேந்திரர் அடைக்கப்பட்டுள்ள அறையில் பேரறிஞர் அண்ணாதுரை முன்பு அடைக்கப்பட்டிருந்தார் என்றுசிறை நிர்வாகம் கூறுகிறது. அண்ணாவும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
போலீஸார் மனு:
இதற்கிடையே ஜெயேந்திரரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டி, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல்செய்துள்ளனர். அந்த மனுவில் சங்கரராமன் கொலை தொடர்பாக ஜெயேந்திரரை 10 நாட்கள் சிறைக் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் நடக்கிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications