உச்ச நீதிமன்றத்தை அணுக ஜெயேந்திரர் தரப்பு முடிவு
சென்னை:
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை வரைக்கும் ஒத்திவைத்து விட்டதால்,உச்ச நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் கோர ஜெயேந்திரர் தரப்பு முடிவு செய்துள்ளது.
கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது 2 நாட்கள் விசாரணை நடந்தது. விசாரணையின்போது ஜெயேந்திரருக்காக பிரபல கிரிமினல் வழக்கறிஞர்ராம்ஜேத்மலானி ஆஜரானார். இரு நாள் விவாதங்களுக்குப் பின்னர் ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்குஒத்திவைத்து நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற முயற்சிக்கப் போவதாக ஜெயேந்திரர் தரப்பு தெரிவிக்கிறது. இதற்காகசென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகளைராம்ஜேத்மலானியின் வழக்கறிஞர்கள் செய்து வருகிறார்கள்.
இருப்பினும் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications