இலங்கை- அமைதி பேச்சு: நார்வே முயற்சி தோல்வி
கொழும்பு:
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க நார்வேமேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது.
தடைபட்டுப் போன அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க நார்வே அரசு முயற்சி எடுத்தது. விடுதலைப் புலிகளின்அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கத்துடன் நார்வே தூதர் எரிக் சோல்ஹைம் பேச்சு நடத்தினார்.
இடைக்கால சுயாட்சி அதிகார அமைக்கும் திட்டம் பேச்சுவார்த்தையில் இடம்பெறவேண்டும் என நார்வே பிரதிநிதிகளிடம்புலிகள் வலியுறுத்தினர். ஆனால் இறுதி ஒப்பந்தத்தில் அத் திட்டம் குறித்து சேர்த்துக் கொள்ளலாம் என்று இலங்கை அரசுயோசனை கூறியது. அதை புலிகள் அமைப்பு நிராகரித்தது.
இதனால் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான நார்வே முயற்சி தோல்வியடைந்தது.
இந் நிலையில் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ரகசிய திட்டம் ஒன்றை அரசிடம் விடுதலைப் புலிகள் அளித்துள்ளனர். அத்திட்டத்தில் உள்ள விவரங்கள் குறித்து செய்தி ஏதும் வெளியிடப்படவில்லை.
புதிய யோசனையை தெரிவித்திருப்பினும், சுயாட்சி அதிகாரம் குறித்த தனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை புலிகள்தெளிவுபடுத்தியுள்ளனர்.
புலிகளின் புதிய யோசனை குறித்து தமது நிலையை அடுத்த சில தினங்களில் அரசு அறிவிக்கும் என்று அரசின் சண்டே அப்சர்வர்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தான் மேற்கொண்டுள்ள அமைதி முயற்சி குறித்து இந்தியாவிடம் விளக்க எரிக் சோல்ஹைம் டெல்லி சென்றுள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications