புதிய மடாதிபதி தேர்வா?: காஞ்சி மடம் மறுப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கர மடத்திற்கு இன்னொரு இளைய சுவாமியை தேர்வு செய்யும் திட்டம் இல்லை என்று சங்கர மடம் திட்டவட்டமாகதெரிவித்துள்ளது. மேலும், இளைய சாமியார் விஜயேந்திரர் சங்கர மடத்தின் புதிய மடாதிபதியாக பொறுப்பேற்பார் என்றதகவலையும் அவர்கள் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து காஞ்சி சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் கூறுகையில், இப்போது அதற்கு என்ன அவசியம் வந்து விட்டது?ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் காஞ்சி சங்கர மடத்தில் தொடர்ந்து ஆச்சார்யர்களாக விளங்குகின்றனர். ஜெயேந்திரரைபோலீஸார் கைது செய்துள்ளனர், அவ்வளவுதான், அவரைத் தண்டித்து விட்டார்களா என்ன?
மடத்திற்கு புதிய சுவாமிகளைத் தேர்வு செய்யும் திட்டமே இல்லை. மட நிர்வாகம் சிறந்த முறையில், வழக்கம் போல நடந்துவருகிறது. அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஜெயேந்திரர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாங்கள் நாடப் போவதில்லை. அதை ஜெயேந்திரரும் விரும்பவில்லை.சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கையை எடுங்கள் என்றுதான் ஜெயேந்திரரும் கூறியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் மீது எங்களுக்குநம்பிக்கை உள்ளது.
விஜயேந்திரர் டிசம்பர் 16ம் தேதி வரை மகபூப் நகரில்தான் தங்கியிருப்பார். தொடர்ந்து அங்கு அவர் யாகம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவருடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பு வைத்து வருகிறோம். அவரை போலீஸார் விசாரித்ததாககூறப்படுவது தவறான தகவல் என்றார் சுந்தரேச அய்யர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications