ஜெயேந்திரர்: நீதிபதியை மாற்ற ராமதாஸ் கோரிக்கை
சேலம்:
சங்கராச்சாரியார் கைது பிரச்சினையை இந்துத்வா அமைப்புகள் திசை திருப்ப முயற்சிக்கின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஜெயேந்திரர் கைது தொடர்பாக பெரும் சர்ச்சையைக் கிளப்புவது தேவையற்றது. ஏனெனில் அவர் கைது செய்யப்பட்டது கொலைவழக்கில்தான். தீவிரமாக விசாரணை நடத்தி, நம்பத்தகுத்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
யாரையும் திருப்திபடுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விரிவானஅறிக்கை வெளியிட வேண்டும். அதுவே சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
அகில இந்திய அளவில் பல்வேறு இந்துத்வா இந்தப் பிரச்சினையை திசை திருப்ப முயற்சிக்கின்றன. எனவே நிலையைத்தெளிவுபடுத்தும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.
ஜெயேந்திரர் மதிக்கப்பட வேண்டிய பொறுப்பில் இருப்பவர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் அவர் மீதான குற்றச்சாட்டுகடுமையானது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஜெயேந்திரரை தனி பங்களாவில் காவல் வைக்கலாம், எந்த பங்களா என்று அரசிடம் கேட்டுச் சொல்லுங்கள், நீதிபதிகள்குடியிருப்பில்கூட நிறைய பங்களாக்கள் காலியாக இருக்கின்றன. அரசின் கருத்தை அறியும்வரை ஜெயேந்திரரை சிறையில்அடைக்க வேண்டாம் என்று நீதிபதி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயேந்திரரின் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக் கோரிதந்திகள் வந்துள்ளதாக சம்பந்தப்பட்ட நீதிபதியே தெரிவித்துள்ளார். இக் கருத்தை நானும் ஆதரிக்கிறேன் என்று ராமதாஸ்கூறினார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications