நாளை சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனு விசாரணை
சென்னை:
சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ள நிலையில், அவரை ஜாமீனில் விடக் கூடாது என்றுகோரி 11 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு தாக்கல் செய்த அந்த மனுவில்,
கோவில் மேலாளர் சங்கரராமன் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் இப்போது தான் புலன்விசாரணை நடந்து வருகிறது. இந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சங்கராச்சாரியாரின் பெயர் சேர்க்கப்பட்டுகைதாகியிருக்கிறார்.
இந் நிலையில் அவரை ஜாமீனில் விடக் கூடாது. விட்டால், விசாரணை நிச்சயமாக பாதிக்கப்படும். அவர் சாட்சிகளைக்கலைக்கவும் வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் அரசுக்கு ஆதரவாக நாங்களும் வாதாடுவோம். இதற்கு அனுமதி தர வேண்டும்என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை நீதிபதி பாலசுப்பிரமணியத்தின் முன் விசாரணைக்கு வருகிறது.
இந் நிலையில் சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையையும் நீதிபதி பாலசுப்பிரமணியம் நாளை விசாரிக்கிறார்.கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மேல் விசாரணையையை புதன்கிழமைக்கு (நாளை) ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications