காஞ்சியில் இந்து முன்னணி- திமுக மோதல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு காவி வேட்டி கட்டிவிட்டு, பட்டை நாமம் போட்டு விஸ்வ விஸ்வபரிஷத் அமைப்பினரும் இந்து முன்னணியினரும் போராட்டம் நடத்தினர்.
இதையறிந்து திமுகவினரும் மதிமுகவினரும் உருட்டுக் கட்டைகளுடன் அங்கு ஓடி வந்தனர். இதையடுத்து பரிஷத் மற்றும்முன்னணியின் தொண்டர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இந்த அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் மடத்துக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் கோஷமிட்டபடி மடத்தின்அருகே வந்தனர்.
திமுக அறக்கட்டளையை அரசு கையப்படுத்த வேண்டும் கொள்ள வேண்டும் என்றும், இந்துக்களின் மனதை புண்படுத்தவேண்டாம் என்றும் கோஷமிட்ட அவர்கள் சன் டிவிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
ஊர்வலமாக வந்த இவர்களில் ஒருவர் மடத்தின் எதிரே இருந்த பெரியார் சிலை மீது காவி வேட்டியை கட்டினார், சிலையின்நெற்றியில் நமாம் போட்டார். பின்னர் அவரது சிலைக்கு தீப ஆராதனை காட்டினார்.
இதைப் பார்த்த சில திமுகவினரும் மதிமுகவினரும் அங்கு வெறிபிடித்த மாதிரி ஓடி வந்தனர். சிலையின் மீது ஏறியவரை கீழேஇழுத்துப் போட்டு உதைக்க ஆரம்பித்தனர். அவர்களை இந்து முன்னணி தொண்டர்கள் திருப்பித் தாக்க ஆரம்பித்த நிலையில்,மேலும் பல திமுக தொண்டர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அங்கு ஓடி வந்தனர்.
இதையடுத்து இந்து முன்னணியினரும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினரும் சிதறி ஓடினர். அவர்களை திமுகவினரும்மதிமுகவினரும் விரட்டிச் செல்ல, போலீசார் ஓடி வந்து அவர்களைத் தடுத்து சமாதானப்படுத்தினர். பரிஷத் மற்றும் முன்னணிதொண்டர்களை போலீசார் காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
சம்பவம் குறித்து தகவல் பரவியதும் ஏராளமான திமுக, மதிமுக தொண்டர்கள் மடத்தின் முன் கூடி சங்கர மடத்துக்கும்சங்கராச்சாரியாருக்கும் எதிராக கோஷமிட ஆரம்பித்தனர். ஆந்திராவில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய இளையவரானவிஜயேந்திரரைக் கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரினர். மேலும் காஞ்சி மடத்தை அரசு தனது கட்டுப்பாட்டில்எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர்கள் கோரினர்.
போலீஸ் உஷார்!:
இந்த பரபரப்பான சம்பவம் நடந்த நிலையில், காஞ்சிபுரம் மக்கள் மன்றம் என்ற அமைப்பின் சார்பில் ஜெயேந்திரர் கைதைஆதரித்து இன்று போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
இந்த அமைப்பினர் ஜெயேந்திரர் கைதை ஆதரித்து தமிழகம் முழுவதும் கொண்டாட்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருவதுகுறிப்பிடத்தக்கது. ஆனால், சங்கர மடம் அருகே போராட்டம் நடத்த இந்த அமைப்புக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.
இதையும் மீறி போராட்டம் நடத்துவோம் என இந்த அமைப்பு அறிவித்துள்ளதால் முன்னெச்சக்கை நடவடிக்கையாக சங்கர மடம்அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அரசு வழக்கறிஞர்கள் மீது ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள் நடத்தியதாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாரணை முடிவடைந்து திரும்பிய அரசுவழக்கறிஞர்களை, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் ஆகியவற்றின் தொண்டர்கள் கடுமையாக தாக்கினர். அவர்களைவழக்கறிஞர்களும் பதிலுக்குத் தாக்கினர்.
இத் தாக்குதலுக்குக் கண்டனம் தெவித்து மதுரையில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னை வழக்கறிஞர்களைத் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். ஜெயேந்திரருக்கு சிறையில் சிறப்புச் சலுகைகள்வழங்கக் கூடாது என்று அவர்கள் கோரினர்.












Click it and Unblock the Notifications