முகாமுக்கு தயாராகும் யானைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதிலும் உள்ள திருக்கோவில்களைச் சேர்ந்த யானைகள், முதுமலையில் வரும் 18ம் தேதி தொடங்கவுள்ளபுத்துணர்வு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு முதல் தமிழக அரசின் சார்பில், நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள யானைகள் சரணாலயத்தில், இந்தபுத்துணர்வு முகாம் நடக்கிறது.
ஜோதிடர் சொன்னதற்காக இந்த முகாமை முதல்வர் ஜெயலலிதா நடத்துவதாக எதிர்க் கட்சிகள் கூறுகின்றன.
இந் நிலையில் இந்த ஆண்டுக்கான முகாம் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இதற்காக லாரிகளில் யானைகள் முதுமலை கொண்டுசெல்லப்பட்டு வருகின்றன.
பல கோவில் யானைகள் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் லாரிகளில் ஏற முரண்டு பிடித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications