முதியவருக்கு நேர்ந்த பரிதாபம் !

Subscribe to Oneindia Tamil

தாராபுரம்:

கோவை மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம் என்ற கிராமத்தில், மருமகனை சட்டையைப் பிடித்துத் தள்ளியதற்காக, 92வயது முதியவரை, ஊர்ப் பஞ்சாயத்து என்ற பெயரில், கிராம மக்கள் 100 பேரின் காலில் விழ வைத்த மகா கொடுமைநடந்துள்ளது.

அலங்கியம் காந்தி நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். வயது 92. இவரது மகள் கருப்பாயி. இவரும், கணவர்ராமமூர்த்தியும் அலங்கியம் கிராமத்திலேயே வசித்து வந்தனர்.

சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் வால்பாறை சென்று அங்குள்ள எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்தனர். சிலநாட்களுக்கு முன்பு தான் இருவரும் அலங்கியம் திரும்பினர்.

மகள் வந்துள்ளதை அறிந்த மாரியப்பன் அவரைப் பார்க்க ராமமூர்த்தி வீட்டுக்குச் சென்றார். ஆனால் அங்கு கருப்பாயி இல்லை.மகள் எங்கே என்று கேட்டபோது, மருமகன் ராமமூர்த்தி அந்தப் பெரியவை அசிங்கமாகத் திட்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாரியப்பன், என் மகளை என்ன செய்தாய் என்று ஆவேசமாக கேட்டுக் கொண்டு அவரது சட்டையைப்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமமூர்த்தி, பெரியவர் என்றும் பாராமல், மாரியப்பனை கீழே தள்ளி விட்டுஅடித்துள்ளார்.

அத்தோடு நில்லாமல் தன்னை மாரியப்பன் சட்டையைப் பிடித்து அடித்து விட்டதாக கிராமத்துப் பஞ்சாயத்தில் புகார் செய்தார்.உடனே கிராமத்தில் உள்ள ஆலமரத்தடியில் வெட்டிக் கும்பல் கூடியது.

கிராமப் பஞ்சாயத்து என்ற பெயரில் கூடிய இந்தக் கூட்டம் ராமமூர்த்தியை அடித்து அவமானப்படுத்திய "குற்றத்திற்காக" ஊரில்உள்ள 100 பேரின் கால்களிலும் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும், ரூ. 100 அபராதம் கட்ட வேண்டும், தவறினால் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படும் என்று தீர்ப்பளித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாரியப்பன் அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு 100 முறை விழுந்து வணங்கியுள்ளார். இதனால்அவருக்கு முதுகு பிடித்துக் கொண்டு 3 நாட்கள் நிற்கக் கூட முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

92 வயது பெரியவரை ஊர் மக்கள் காலில் விழ வைத்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்ததண்டனை குறித்து போலீஸில் புகார் செய்யக் கூடாது என்றும் பஞ்சாயத்துக்காரர்கள் மாரியப்பனை எச்சரித்துள்ளனர்.

இருப்பினும் மாரியப்பனுக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர்ஆகியோரிடம் புகார் கொடுக்கப் போவதாக மாரியப்பனின் மகன்கள் கூறியுள்ளனர்.

இந்த விஷயத்தில் போலீசார் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+