அமெரிக்கா: புதிய வெளியுறவு அமைச்சர் ரைஸ்
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து காலின் பாவல் விலகினார். இதையடுத்து அப் பதவியில்காண்டலீஸ்ஸா ரைஸை நியமிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் முடிவு செய்துள்ளார்.
குவைத்தை இராக் ஆக்கிரமித்தபோது இராக்குக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய அமெரிக்க ராணுவக் கூட்டுப் படைத்தலைவரான காலின் பாவல், இம்முறை இராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை எதிர்த்தார்.
இதனால் புஷ்சுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஆனாலும், அமைச்சரவையில் அவர்தொடர்ந்தார். இந் நிலையில் அதிபர் தேர்தலில் புஷ் மீண்டும் வெற்றி பெற்றார்.
தேர்தலில் புஷ்ஷின் தோல்விக்கு தான் காரணமாக இருக்கக் கூடாது என்பதற்காகவே நெருக்கடியான நேரத்தில், கருத்துவேறுபாடு இருந்தாலும் கூட பாவல் தொடர்ந்து பதவியில் இருந்ததாகவும் இப்போது புஷ் வென்றுவிட்டதையடுத்து பதவியைராஜினாமா செய்ததாகவும் தெரிகிறது.
இதற்கு நன்றிக் கடனாக அடுத்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு காலின் பாவலின் பெயரை புஷ்பரிந்துரை செய்வார் என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் பாவலுக்குப் பதிலாக ஜார்ஜ் புஷ்ஷின் பாதுகாப்பு ஆலோசகரான காண்டலீஸ்ஸா ரைஸ் புதிய வெளியுறவுத்துறைஅமைச்சராவார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராக், வட கொரியா, இரான், பாலஸ்தீனம், இந்தியா-பாகிஸ்தான் மோதல் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் முக்கியமுடிவுகள் எடுக்க புஷ்சுக்கு உறுதுணையாக இருப்பவர் ரைஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications