ஜெயேந்திருக்காக புதிய இந்து அமைப்பு துவக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜெயேந்திரரின் விடுதலைக்காக பாடுபட பல இந்து மதத் தலைவர்களும் ஒன்று சேர்ந்து சங்கட் மோசன் சேனா என்றஅமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இத் தகவலை பூரியில் உள்ள ஆதி சங்கராச்சாரி ஆசிரமத்தின் தலைவர் ஜானந்த் தேவ் தீர்த்த சுவாமிகள் மற்றும் சனாதன தர்மரக்ஷ சமிதி நிர்வாகிகள் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
இந்து மதத்துக்கு இத்தகைய நெருக்கடி ஏற்பட்டதற்கு சங் பரிவார அமைப்புகளே காரணம்.
ஜெயேந்திரரை விடுவிக்க தமது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் மனுகொடுக்கப் போகிறோம். மேலும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஜெயேந்திரரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறுவலியுறுத்த ஒரு குழுவை அனுப்பவுள்ளோம்.
பாஜகவினர் எதை செய்ய வேண்டுமோ அதை விட்டுவிட்டு, இதிலும் அரசியல் செய்து லாபம் தேட முயல்கின்றனர் என்றனர்.












Click it and Unblock the Notifications