பஸ்-கார் மோதலில் 7 பேர் பலி
திருச்சி:
திருச்சி அருகே அரசு பேருந்தும் டயோட்டா குவாலிஸ் காரும் மோதிக் கொண்டதில் காரில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாகஇறந்தனர்.
திருச்சி பாலக்கரை பழைய கோவில் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச் செல்வம். இவருடைய மனைவி ரேவதி. இவர்கள், தங்களதுஉறவினர்கள் 5 பேருடன் விராலிமலையில் துக்கம் விசாரிக்க காரை வாடகைக்கு எடுத்துச் சென்றனர்.
துக்கம் விசாரித்து விட்டு திருச்சிக்கு திரும்பி வந்தபோது, திருச்சி மணிகண்டத்தை அடுத்த அளுந்தூர் பவர் கிரீடு அருகே,மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து, அந்தக் கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் டிரைவர் உள்பட காரில் பயணம் செய்த 7 பேரும் உடல் நசுங்கி இறந்தனர். பலியானவர்கள் விவரம்:
1. ஆறுமுகம் (33), பூ வியாபாரி, படையாச்சி தெரு, பாலக்கரை
2. கோமதி ஜெயம் (27) (ஆறுமுகத்தின் மனைவி)
3. ரேவதி (32)
4. ஏழுமலை (40), படையாச்சி தெரு, பாலக்கரை
5. ராசம்மாள் (55) (ரேவதியின் பெரியம்மா)
6. ஆறுமுகம் (25), பாலக்கரை
7. முருகேசன் (34), கார் டிரைவர், கீழபடையாச்சி தெரு
திருச்சி அரசு மருத்துவமனையில் இவர்களது உடல்களுக்கு பிரேதப் பரிசோதனை நடந்தது.
இந்த விபத்து நடந்ததும் அரசு பேருந்து ஓட்டுநர் பால்ராஜ் (40) விராலிமலைக்கு தப்பி ஓடி விட்டார். பின்னர் அவரை போலீஸார்கைது செய்தனர்.
ஜெ. இரங்கல்:
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த விபத்து குறித்து அறிந்து நான் மிகுந்த மன வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்தஇரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications