For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. பேச்சு உரிமை மீறல்: ராம் ஜேத்மலானி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயேந்திரரின் புகழைக் கெடுக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசியது சட்டசபையின் உரிமையைமீறிய செயலாகும் என்று ஜெயேந்திரரின் வழக்கறிஞர் ராம் ஜெட்மலானி கூறினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஜெயேந்திரரின் ஜாமீன் மீதான விசாரணையின்போது ஜேத்மலானி கூறியதாவது:

காஞ்சி மடத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் கொலையாளிகளுக்குக் கொடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில்கூறப்படுகிறது. ஆனால் கடந்த 3 மாதங்களில் ரூ.3 லட்சம்தான் மடத்தின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

கதிரவன் என்பவர் நவம்பர் 9-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயேந்திரரைக் கைதுசெய்ததாகப் போலீசார் கூறுகின்றனர். ஒரு பெரிய பீடாதிபதியை மிகச் சாதாராண நபரான கதிரவனின் வாக்குமூலத்தை மட்டுமேஆதாரமாக வைத்து கைது செய்திருக்கிறார்கள்.

கொலை வழக்கில் ஒருவரைக் கைது செய்வதற்கு கொலையாளியின் வாக்குமூலம் மட்டும் போதாது. வேறு சில ஆதாரங்களும்தேவை.

சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரருக்கு எதிராக வலுவான ஆதாரம் இருந்தால் மட்டுமே, அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம்தள்ளுபடி செய்ய முடியும்.

கொலையாளிகளுடன் ஜெயேந்திரர் செல்போனில் பேசினார் என்று கூறப்படுவது உண்மையல்ல. ஜெயேந்திரர் செல்போனைஉபயோகப்படுத்துவதே இல்லை. அவரின் மேலாளர்தான் செல்போனைப் பயன்படுத்துவார்.

செல்போனில் ஜெயேந்திரர் எப்போது யாருடன் என்ன பேசினார் என்ற விவரங்களைப் போலீசார் தெரிவிக்காதவரை இந்தகுற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்கக்கூடாது.

ஜெயேந்திரருக்கு சிறப்புச் சலுகை தர வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை. ஜெயேந்திரக்கு ஏராளமானபக்தர்கள் உள்ளனர். அவர் மடத்தையும், பக்தர்களையும் துறந்துவிட்டு நேபாளம் தப்பிச் செல்வார் என்று கூறுவது மிகஅபத்தமான குற்றச்சாட்டு.

கொலை நடந்த செப்டம்பர் 3-ம் தேதிக்குப் பின், ஜெயேந்திரர் நவம்பர் 7-ம் தேதி பெங்களூரில் இருந்து ஹைதராபாத்துக்குச்சென்றார். அங்கிருந்து ஒளரங்காபாத் சென்றார். பின்பு மீண்டும் ஹைதராபாத் வந்தார்.

நவம்பர் 10-ம் தேதி ஹைதராபாத் அருகே மெஹபூப் நகருக்குச் சென்றார். நேபாளத்துக்குத் தப்ப வேண்டும் என்றுநினைத்திருந்தால் அவர் அப்போதே தப்பியிருக்கலாமே.

மேலும் ஹைதராபாதில் இருந்து நேபாளத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடியாது. அவ்வளவு தூரத்துக்கு பறந்து செல்லும்திறன் ஹெலிகாப்டருக்குக் கிடையாது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும்போது, ஜெயேந்திரரின் புகழைக் கெடுக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதாசட்டப்பேரவையில் பேசியது உரிமையை மீறிய செயலாகும்.

சங்கரராமன் கொலையில் போலியாக சிலரை சரணடைய வைத்ததாக ஜெயேந்திரர் மீது போலீஸார் கூறும் குற்றச்சாட்டுக்கு எந்தஆதாரமும் இல்லை என்று ராம் ஜெத்மலானி வாதாடினார்.

போலீசாருக்காக வாதாடி சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் துளசி,

சங்கராச்சாரியாரிடம் கையைக் கட்டிக் கொண்டு தான் போலீசார் பேசினர். கைது குறித்து போலீசார் அவரிடம் சொன்னவுடன்முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது தெரியுமா?, அவர் சொன்னால் தான் வருவேன் என்றார் சங்கராச்சாரியார். மேலும் கைதுநடவடிக்கையை ரெக்கார்ட் செய்த வீடியோவில் கையில் செல்போனுடன் அவர் இருக்கிறார். இதனால் சங்கராச்சாரியார்செல்போனே பயன்படுத்துவதில்லை என்ற ஜேத்மலானியின் வாதம் தவறானது.

ஒரு மடாதிபதி புனிதப் பாதையில் இருந்து விலகிப் போனதற்கான முழு ஆதாரம் எங்களிடம் உள்ளது. தனது புனிதக் கடமையில்இருந்து திசை தவறிய மடாதிபதி மீதான கொலைச் சதிக்கு எங்களிடம் வலுவான ஆதரங்கள் உள்ளன. விசாரணையின்போதுஅவற்றை நிச்சயம் வெளியிடுவோம்.

இது ஜாமீன் மனு மீதான விசாரணை தான். இந் நிலையில் கொலை வழக்கு சரியா, இல்லையா என்ற விசாரணையை இப்போதுநடத்த முடியாது. விசாரணை இன்னும் முடியாத நிலையில் ஜாமீன் தரப்படக் கூடாது. சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் வழங்கினால்மடத்தின் ஆட்களிடம் எங்களால் விசாரணை நடத்த முடியாமல் போய்விடும்.

"Bail is a rule and jail is an exception" என்பார்கள். அந்த மேற்கோளுக்குள் இந்த வழக்கு நிச்சயம் இடம் பெறாது. காரணம்,ஜெயேந்திரர் மீதான குற்றச்சாட்டு மிக வலிமையானது. சுதந்திரம் என்ற பெயரில் இந்த வழக்கில் யாருக்கும் சாதகமாக நீதிமன்றம்விட்டுத் தந்துவிடக் கூடாது.

ஜெயேந்திரர் ஜாமீனில் வெளியே போனால் சாட்சியங்கள் கலைக்கப்படும். அவர் அதி சக்தி வாய்ந்த நபர். அவரால் சாட்சிசொல்பவர்களுக்கே கூட ஆபத்து வரலாம்.

வங்கியிலிருந்து பெரும் தொகை எடுக்கவில்லை என்று ஜேத்மலானி கூறுகிறார். ஆனால், உண்மை என்ன தெரியுமா ஆகஸ்ட்முதல் அக்டோபர் வரை ரூ. 33 லட்சத்தை எடுத்துள்ளது சங்கர மடம் என்றார்.

முன்னதாக நீதிமன்றத்தில் தவறான மனுவைத் தாக்கல் செய்ததற்காக ஜெயேந்திரரின் வழக்கறிஞர் ஒருவருக்கு நீதிபதி கண்டனம்தெரிவித்தார். இதையடுத்து, அந்த வழக்கறிஞர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

அதே போல சங்கரராமன் படுகொலை தொடர்பான சில போட்டோ ஆதாரங்களை அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதிபாலசுப்பிரமணியத்திடம் தந்தார். ஆனால், இதுபோன்ற கொலை தொடர்பான போட்டோக்களை நான் எப்போதும்பார்ப்பதில்லை என்று கூறிய நீதிபதி அவற்றைத் திருப்பித் தந்துவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X