போலீஸ் காவலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல்
சென்னை:
ஜெயேந்திரரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் அனுமதியளித்ததை எதிர்த்து சென்னைஉயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரிக்கப்படவுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி காஞ்சிபுரம்குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறை மனுத் தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த நீதிபதி உத்தரமராஜன், 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயேந்திரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி கனகராஜ் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறினார். இந்த மனு நாளை விசாரணைக்குவருகிறது.
உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications