சட்டசபையில் எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று திமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள், தாங்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்துவெளிநடப்பு செய்தன.
சட்டசபை இன்று கூடியபோது, கேள்வி நேரத்திற்கு பின் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுப்பதற்காக சிறிது நேரம்ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சபை கூடியது.
அப்போது திமுகவைச் சேர்ந்த சாமிநாதன் எம்.எல்.ஏ. எழுந்து, நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறை கழிவு நீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து இன்று உண்ணாவிரதம் நடக்கிறது. இது தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
அப்போது அமைச்சர் பொன்னையன் இடைமறித்து, இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து விவாதிக்கஅனுமதிக்க கூடாது என்றார்.
இதைக் கண்டித்து துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்தில் மீண்டும்சட்டசபைக்கு திரும்பி வந்தனர்.
இதனையடுத்து பாஜக உறுப்பினர்கள் சங்கராச்சாரியார் பிரச்சினையை எழுப்ப முயன்றனர். இதற்கு அனுமதி வழங்கப்படாததால்எச். ராஜா தலைமையில் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். இதேபோல் பாமக எம்.எல்.ஏ.க்.களும் தங்கள்கோரிக்கை குறித்து பேச அனுமதிக்காததால் ஜி.கே. மணி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு குறித்து எச். ராஜா சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது:-
சங்கராச்சாரியார் ஜாமீன் மனு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதாடுகையில்,சங்கராச்சாரியாரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் அனுமதி கொடுத்ததாக தவறான தகவலைகொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று அனுமதி கேட்டோம். அனுமதி வழங்கப்படாததால்வெளி நடப்பு செய்தோம் என்றார்.
பாமகவினரின் வெளிநடப்பு குறித்து ஜி.கே. மணி கூறியதாவது:-
பண்ருட்டி தொகுதி பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்கஅனுமதி வழங்கப்படாததால் நாங்கள் வெளி நடப்பு செய்தோம் என்று கூறினார்.
பின்னர் பாமக எம்.எல்.ஏக்கள் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications