வாஜ்பாய் தர்ணா: அத்வானி உண்ணாவிரதம்-கலாமிடம் மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காஞ்சி சங்கரச்சாரியார் கைது விஷயத்தில் தமிழக அரசின் மீது ஜனாதிபதி அப்துல் கலாமிடம் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும்,முன்னாள் துணைப் பிரதமர் அத்வானியும் நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.

சங்கராச்சாரியார் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டதை எதிர்த்து வாஜ்பாய் தர்ணா போராட்டம் நடத்தவுள்ளார். அத்வானிஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளார். மேலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய போராட்டத்தில்இறங்கப் போவதாகவும் பா.ஜ.க. அறிவித்துள்ளது.

மேலும் சங்கராச்சாரியார் போலீஸ் காவலில் இருக்கும்போதே அவரை வாஜ்பாயும் அத்வானியும் சந்திக்கப் போவதாகவும்பா.ஜ.க. அறிவித்துள்ளது. (போலீஸ் காவலில் இருக்கும்போது வழக்கறிஞரைத் தவிர வேறு யாரும் சங்கராச்சாரியாரை சந்திக்கஅனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

கலாமிடம் வாஜ்பாய் மனு:

இன்று மூத்த பா.ஜ.க. தலைவர்களுடன் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்ற வாஜ்பாயும், அத்வானியும் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில்,

மதத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட, மத அமைப்புகள் தொடர்பான வழக்குகளை எப்படிக் கையாள வேண்டும் என மத்திய, மாநிலஅரசுகளுக்கு வழிகாட்ட புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட முறையும், அவர் நடத்தப்படும் விதமும் மிகவும் கவலை தருகிறது. வழக்கு விசாரணைநடந்து வரும் நிலையில் அவரை குற்றவாளியாகவே நடத்துகிறது தமிழக அரசு.

நீதியை, சட்டத்தை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை பா.ஜ.க. வலியுறுத்துகிறது.அதே நேரத்தில் இந்துக்களின் உணர்வுகளை நாம் மதித்தாக வேண்டும். இந்துக்களின் உணர்வுகளை கேவலப்படுத்தும் செயலில்தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடு தழுவிய போராட்டம்:

இதற்கிடையே சங்கராச்சாரியாருக்கு ஆதரவாக நாளை முதல் 3 தினங்களுக்கு தேசம் தழுவிய போராட்டத்தில் குதிக்க பா.ஜ.கதிட்டமிட்டுள்ளது.

டெல்லியில் நடக்கும் நாளை நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அத்வானி தலைமை வகிக்கிறார். நாளை மறுதினம்முரளி மனோகர் ஜோஷி தலைமையிலும், மூன்றாவது நாள் ஜஸ்வந்த் சிங் தலைமையிலும் தொடர் உண்ணாவிரதப்போராட்டங்கள் நடக்கவுள்ளன.

திங்கள்கிழமையன்று வாஜ்பாய் தலைமையில் தர்ணா போராட்டமும் நடக்கிறது.

சுஷ்மா சுவராஜ் ஆவேச பேட்டி:

இத் தகவலை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். அவர் கூறுகையில்,

போலீஸ் காவலில் சங்கராச்சாரியார் அனுப்பப்பட்டதையடுத்து அவசரமாகக் கூடிய பா.ஜ.க. உயர் மட்டக் கூட்டத்தில் இந்தப்போராட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

மேலும் சங்கராச்சாரியார் போலீஸ் காவலில் இருக்கும்போதே அவரை வாஜ்பாயும் அத்வானியும் சந்திப்பார்கள். இதற்காகஅத்வானி வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை செல்கிறார். (ஆனால், இவர்களுக்கு போலீசார் அனுமதி தருவார்களா என்றுதெரியவில்லை.).

சங்கராச்சாரியாரைக் கேவலப்படுத்திப் பார்ப்பதே தமிழக அரசின் நோக்கமாகத் தெரிகிறது. முழுக்க முழுக்க ஓட்டுவேட்டைக்காக நடத்தப்பட்டுள்ள நாடகம் இது. இதன்மூலம் இந்து மதத்தையே புண்படுத்திவிட்டார்கள்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் முழு பங்குண்டு. இந்து மதத்துக்கு எதிராக மத்திய காங்கிரஸ் கூட்டணி போட்ட திட்டம்தான் இது. இதனால் தான் தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக-அதிமுக போட்டியில் பலிகடா:

திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கு இடையே நடக்கும் வோட்டுச் சண்டையில் சங்கராச்சாரியார் பலிகடாஆக்கப்பட்டுவிட்டார். அதிமுக அரசு சர்வாதிகாரப் போக்குவடன் செயல்படுகிறது என்றார் சுவராஜ்.

பேட்டியின்போது முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிடாமல் மத்திய அரசு, தமிழக அரசு என்று சொல்லியே தாக்கினார் சுவராஜ்.அவரிடம் பா.ஜ.க.-அதிமுக கூட்டணி என்ன ஆனது என்று நிருபர்கள் கேட்டபோது, அது இன்னும் எங்கே இருக்கு. எங்களுக்குஎம்.பிக்களின் எண்ணிக்கையைவிட மக்களின் மனம் புண்படாமல் இருப்பது தான் முக்கியம் என்றார்.

சங்கராச்சாரியார் என்ன பெரிய கிரிமினலா, குற்றம் உறுதியாகிவிட்டதா? அப்புறம் ஏன் போலீஸ் காவலில் அவரை தமிழக அரசுஎடுத்தது? என்று கோபத்துடன் கேட்டார் சுஷ்மா சுவராஜ்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனுக்குச் சென்று ஆரத் தழுவி பா.ஜ.க-அதிமுககூட்டணி அமைத்தவர் இதே சுஷ்மாதான் என்பது நினைவுகூறத்தக்கது.

அத்வானிக்கு ஜெ நோ:

இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் அத்வானி பேச முயன்றபோது, ஆள் இல்லை என்று பதில்தரப்பட்டதாக பா.ஜ.க. வட்டாரம் கோபத்துடன் தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+