நடிகை பாபிலோனா மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவல் நிலையத்தில் ஆபாசமாகப் பேசி தகராறு செய்ததாக கவர்ச்சி நடிகைகள் பாபிலோனா, மாயா ஆகியோர் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் ஆழ்வார்திருநகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் பிரிதிக் என்ற மாணவருக்கும் இன்னொருமாணவருக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டது. அப்போது பாபிலோனாவின் தம்பி பாலு, மாயாவின் மகன் விக்னேஷ் ஆகியோர்பிரிதிக்குக்கு ஆதவராக களமிறங்கியுள்ளனர்.

இந்தத் தகராறு தொடர்பாக காவல் நிலையத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து விருகம்பாக்கம் போலீசார் விக்னேஷ், பாலு மற்றும்பிரிதிக் ஆகியோரை கைது செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பாபிலோனா, மாயா ஆகியோர் காவல் நிலையத்திற்கு சென்றனர். போலீசாரிடம் பேசிவிட்டு அவர்கள்வெளியே வந்தபோது மாயாவின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மீண்டும் காவல் நிலையத்திற்குள் சென்ற இருவரும் கார் கண்ணாடி உடைப்பு தொடர்பாக காவலர்களுடன் தகராறுசெய்தனர். அப்போது அண்ணாநகரைச் சேர்ந்த சிங்காரம் என்பவர், என்ன பிரச்சனை என்று கேட்டிருக்கிறார். அவரை இருவரும்சேர்ந்து மிக ஆபாசமாகத் திட்டியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து சிங்காரம் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மாயா, பாபிலோனா இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முன்னாள் கவர்ச்சி நடிகையான மாயா காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+