சட்டம் தன் கடமையை செய்யும்: ஜோதிபாசு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
ஜெயேந்திரர் சங்கராச்சாரியாராக இருந்தாலும், கடவுளாக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஜெயேந்திரர் சங்கராச்சாரியாராக இருக்கலாம்; கடவுளாகக் கூட இருக்கலாம். ஆனால் சட்டம் என்று ஒன்று இருக்கிறது. அது தன்கடமையைச் செய்யும்.
நாங்கள் பல முறை கைது செய்யப்பட்டிருக்கிறோம். அவர் ஒரே ஒரு முறைதான் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறினார்.
ஜெயேந்திரர் குற்றமற்றவரா என்பது குறித்து கருத்து சொல்ல மறுத்த ஜோதிபாசு, அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்றுநினைக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications