பெட்ரோல்: திமுக மீது ஜெ. தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவின் ஒப்புதலுடன்தான் பெட்ரோல், டீஸல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா இன்று கூறினார்.

பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறைக்க கோரி சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் இன்றுசட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்து முதல்-வர் ஜெயலலிதா கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டிற்கு பிறகு விற்பனை வரி உயர்த்தப்படவில்லை. ஆந்திரா-, கர்நாடகா-, கேரளா ஆகியமாநிலங்களில் தமிழ்நாட்டை விட அதிக அளவு விற்பனை வரி விதிக்கப்படுகிறது.

மத்திய அரசு தற்போது 3 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்கிறது. அப்படியிருக்கையில், நாங்கள் விற்பனைவரியை குறைத்து வருமானத்தை இழக்க வேண்டும் என்று சொல்வது கேலிக்குரியது.

சர்வதேச சந்தையில் கடந்த 2 மாதங்களாக கச்சா எண்ணை விலை குறைந்து வருகிறது. விலையை உயர்த்துவது குறித்து மத்தியஅமைச்சரவை கூடி விவாதித்தபோது, திமுக அமைச்சர் தயாநிதி மாறனும் அதில் கலந்து கொண்டார்.

திமுகவின் ஒப்புதலுடன் தான் விலை உயர்த்தப்பட்டது. அவர்கள் அங்கே ஆதரிப்பதும் இங்கே எதிர்ப்பதும் கேலிக்குரியதாகும்என்று பேசினார்.

அதனையடுத்து காவிரி டெல்டா பகுதி வடிகால் பராமரிப்பு மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் குறித்து சிறப்புகவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன் மீது காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், திமுக உறுப்பினர் கோ.சி. மணி, பாமக தலைவர் ஜி.கே. மணி,கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஹேமச்சந்திரன், சிவபுண்ணியம், ஆகியோர் பேசினார்கள்.

இவர்களுக்கு பதிலளித்து ஜெயலலிதா பேசியதாவது:

வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. தமிழக அரசு சார்பில் ரூ. 5 கோடி வெள்ள நிவாரண நிதியாகதரப்பட்டுள்ளது.

வீரப்பனை சுட்டுக் கொன்றது அதிரடிப்படையின் மகத்தான சாதனை ஆகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில்ஹேமச்சந்திரன் பேசினார். வீரப்பனை பிடிக்க ரூ. 22 கோடி செலவிட்டு இருக்கிறீர்கள். ஆனால் வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 5கோடி மட்டுமே ஒதுக்கி இருக்கிறீர்கள் என்று கூறினார்.

வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கப்பட்டது ஆரம்ப பணிகளுக்கு மட்டும்தான்.

எனவே நீங்கள் நடத்தும் வெறும் வெத்துவேட்டு போராட்டத்தினால் எந்த பயனும் இல்லை. விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டகடன்களை ரத்து செய்ய மத்திய நிதிஅமைச்சரிடம் சென்று நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று பேசினார்.

பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பழனிச்சாமி பேசும் போது மத்திய அரசிடம் நிதி வேண்டும் என்று கேட்பதற்கு முதல்வர்எங்களை அழைத்து சென்றால் நாங்களும் வந்து சொல்ல தயார் என்றார்.

அடுத்த பேசிய ஜெயலலிதா, டெல்லிக்கு அழைத்து செல்ல நான் தயார். அதற்கும் இவ்வளவு செலவாகி விட்டதே என்றுநீங்கள்தான் கணக்கு கேட்பீர்கள். நீங்கள் வற்புறுத்தினால் வெள்ள நிவாரண தொகை முழுவதுமாக கிடைக்கும். அதை தமிழகமக்களுக்காக வற்புறுத்தி பெற்றுத் தாருங்கள் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+