சங்கராச்சாரியாருக்கு 3 நாள் போலீஸ் காவல்!!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியாரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காஞ்சிபுரம் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சங்கராச்சாரியாரை போலீசார் வேனில் ஏற்றி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உள்ள மகளிர்காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம்குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் உத்தரமராஜன் விசாரித்தார்.
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிப்பதாகக் கூறிய நீதிபதி, சங்கராச்சாரியாரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து ஆஜர்படுத்தஉத்தரவிட்டார். இதையடுத்து நேற்று காலை வேலூர் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட சங்கராச்சாரியார் மாலை வரைவைக்கப்பட்டிருந்தார்.
மனு மீதான விசாரணையும் இரு தரப்பினரின் வாதங்களும் மாலை நெடு நேரம் வரை நீண்டதால், தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. இதனால் மீண்டும் வேலூர் கொண்டு செல்லப்பட்டு இரவு 7.15 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டார்,
இன்று காலை மீண்டும் 10.25 மணிக்கு சங்கராச்சாரியார் காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பகல் 11.30 மணியளவில் கோர்ட் ஹாலுக்குள் நீதிபதி உத்தமராஜன் வந்தார். அப்போது பேசிய சங்கராச்சாரியாரின் வழக்கறிஞர்தியாகராஜன்,
சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் போலீஸ் காவலில் எடுக்கும் மனுவையே தமிழக அரசுதாக்கல் செய்தது என்றார். இதை அரசுத் தரப்பு வழக்கறிஞர் மறுத்தார்.
இதையடுத்து 11.45 மணியளவில் நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார். அதில்,
இன்று பகல் 12.05 முதல் வரும் 22ம் தேதி வரை மூன்று நாட்கள் சங்கராச்சாரியாரை போலீசார் தங்களது காவலில் வைத்துவிசாரிக்கலாம். 22ம் தேதி காலை 10.30 மணிக்கு அவரை மீண்டும் இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
இந்தக் கொலை வழக்கின் கேஸ் டைரியையும் போலீசார் தாக்கல் செய்த ஆவணங்களையும் பார்க்கும்போது, சங்கராச்சாரியாரைபோலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போதுமான அடிப்படை ஆதாரங்கள் இருப்பது உறுதியாகிறது. இதனால் அவரை போலீஸ்காவலுக்கு அனுப்புவது நியாயமானது, அவசியமானது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.
விசாரணை நாட்களில் தினமும் மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை ஜெயேந்திரரை அவரது வழக்கறிஞர் ஒருவர் சந்தித்துப்பேசலாம்.
தினமும் அவருக்கு அரசு மருத்துவரைக் கொண்டு உடல் பரிசோதனை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையடுத்து சங்கராச்சாரியாரின் முகம் வாட்டமானது.
அப்போது பேசிய ஜெயேந்திரரின் வழக்கறிஞர், போலீஸ் காவலுக்கு அனுப்பப்படும்பட்சத்தில் அவர் மனரீதியில்துன்புறுத்தப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் விரும்பும்போது வழக்கறிஞரை சந்திக்கவும் அவருக்கு அனுமதி தரவேண்டும் என்றார்.
அப்போது சங்கராச்சாரியாரைப் பார்த்து பேசிய நீதிபதி உத்தமராஜன், உங்கள் உடலில் காயம் ஏதும் உள்ளதா? என்று கேட்டார்.அதற்கு இல்லை என சங்கராச்சாரியார் பதில் தர, அதை வாக்குமூலமாகப் பதிவு செய்த நீதிபதி, அதில் அவரது கைநாட்டையும்வாங்கிக் கொண்டார்.
சங்கராச்சாரியாரை எங்கு வைத்து விசாரிக்கப் போகிறார்கள் என்று அவரது வழக்கறிஞர் கேட்க, அதை பின்னர் தெரிவிப்போம்என அரசு வழக்கறிஞர் கூறினார்.
இதையடுத்து சங்கராச்சாரியாரை அழைத்துக் கொண்டு போலீசார் வெளியில் வந்தனர். வேனில் ஏற்றிக் கொண்டு கிளம்பினர்.அந்த வேனைத் தொடர்ந்து 7 வேன்கள், ஜீப்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் தொடர்ந்தனர்.
அவர் எங்கு கொண்டு செல்லப்படுகிறார் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. நிருபர்களின் வாகனங்கள் அந்த போலீஸ்வாகனங்களைத் தொடர்ந்தபோது, மாவட்ட காவல்துறை தலைமைக வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்துக்குசங்கராச்சாரியார் கொண்டு செல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நிருபர்களின் வாகனங்களும் உள்ளே நுழைய முயல, அவை வளாகத்தின் வெளியிலேயே தடுக்கப்பட்டன.
முன்னதாக இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என மாஜிஸ்திரேட் உத்தரமராஜன் கூறியிருந்தார்.இதனால் 10.25 மணிக்கே சங்கராச்சாரியார் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டுவிட்டார். ஆனால், ஆனால், 12 மணிக்குத் தான்தீர்ப்பை வழங்கினார் நீதிபதி.
இந்தத் தீர்ப்பையொட்டி நீதிமன்றம் முழுவதுமே போலீஸ் தலைகளாகவே காணப்பட்டன. பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள்பெருமளவில் நீதிமன்ற வளாகத்தின் வெளியே திரண்டு நின்றிருந்தனர். ஆனால், நேற்றைப் போலவே இன்றும் நீதிமன்றத்துக்குள்வழக்கறிஞர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ராகுகாலம்:
முன்னதாக நேற்று, நீதிபதியிடம் பேசிய சங்கராச்சாரியார், நாளை காலை 10.30 மணியிலிருந்து 12 மணி வரை ராகுகாலம்.இதனால் 12 மணிக்கு மேல் தீர்ப்பை வெளியிடுங்கள் என்றார்.
இதை நீதிபதி உத்தமராஜன் ஏற்க முன் வந்த நிலையில், அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.சட்டத்தில் ராகு காலத்துக்கு எல்லாம் இடம் கிடையாது என்றார். இதையடுத்து, ராகுகாலம் எல்லாம் பார்க்காமல் காலையிலேயேதீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இந் நிலையில் இன்று 11.45க்கு தீர்ப்பை வழங்கினார் நீதிபதி. ராகுகாலத்தில் வந்த தீர்ப்பு சங்கராச்சாரியாருக்கு பாதகமாகஅமைந்துவிட்டது.












Click it and Unblock the Notifications