ஜெ. தற்பெருமை: கருணாநிதி தாக்கு
சென்னை:
எது நடந்தாலும் அதை நான்தான் செய்தேன் என்று கூறிக்கொள்வதில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எப்போதுமே மட்டற்றமகிழ்ச்சி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஹூண்டாய், போர்டு, செயின்ட் கோபைன் தொழிற்சாலைகளை தான் தான் கொண்டு வந்ததாகவும், 1996-2001 வரை திமுகஆட்சியில் எந்த புதிய தொழிற்சாலையும் தொடங்கவில்லை என்றும் சட்டசபையில் ஜெயலலிதா கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழக அரசின் சார்பில் எது நடந்தாலும் அதை நான் தான் செய்தேன் என்று புகழ்ந்து கொள்வதில் ஜெயலலிதாவுக்கு தனிமகிழ்ச்சி. அவரது அறிக்கை, பேச்சு என எதை எடுத்துக் கொண்டாலும் "நான் தான் செய்தேன் என்று நொடிக்கு நூறு தடவைபுகழ்ந்து கொள்வார்.
சாதாரணமாக ஒரு சிறிய அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதாக இருந்தால் கூட அதை ஜெயலலிதா தான் திறந்துவிடஉத்தரவிட்டார் என்று அறிக்கை வரும். அப்படியென்றால் பொதுப்பணித் துறை அமைச்சர் எதற்காக? ஓர் அரசின் சார்பில்அத்தனை காரியங்களையும் இவரே செய்தாரென்றால் பின் எதற்காக மற்ற அமைச்சர்களும் அதிகாரிகளும் இருக்கின்றனர்?
1996-2001 வரை திமுக ஆட்சியில் எந்த புதிய தொழிற்சாலையும் தொடங்கவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ நிறுவனம் கடந்த 2000ம் ஆண்டு வெளியிட்டஅறிக்கையில்,
ரூ.1.56 லட்சம் கோடி முதலீடுகளைப் பெற்று தமிழகம் தொழில் முதலீடுகளில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகமுன்னேறியுள்ளது என்று எழுதியிருந்தது. இதைவிட வேறு அத்தாட்சி முதல்வருக்கு தேவையிருக்காது என கருதுகிறேன்.
ஹூண்டாய், போர்டு கார் தொழிற்சாலைகள் திமுக ஆட்சிக்காலத்தில் வந்ததை பலமுறை எடுத்துக் கூறியும் திரும்பத் திரும்ப ஒரேபல்லவியை பாடிக் கொண்டிருக்கிறார். செயின்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலை தொடங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 97ம்ஆண்டு ஜனவரி 6ல் தான் கையெழுத்தானது.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நாங்குனேரி உயிர் தொழில்நுட்ப தொழிற்பூங்கா திட்டத்திற்காக கடந்த மூன்றுஆண்டுகளில் இந்த அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? இந்த தொழிற்பூங்காவில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள்தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தால் ரூ.8,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் கிடைத்திருக்கும்.
ஜெயலலிதா ஆட்சியில் 15 சதவீத கமிஷன் பெறுவதை பொருளாதார நுண்ணறிவு அமைப்பு எடுத்துக் காட்டியது. அந்த 15சதவீதம் இப்போது ஒரு மடங்கு உயர்ந்துவிட்டது என்பதையும் நாடறியும்.
இந்த அழகில் தவறான தகவல்களை வெளியிட்டு தன் தகுதியை குறைத்துக் கொள்கிறார் முதல்வர் என்று கருணாநிதிகூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications