கும்பகோணம்: விசாரணை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷனின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்களுக்குநீட்டிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி நடந்த பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள்பலியானார்கள்.
இந்த தீ விபத்து தொடர்பாக விசாரிக்க நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதனையடுத்துநீதிபதி சம்பத் உயிர் தப்பிய குழந்தைகள், அவர்களது பெற்றோர் மற்றும் ஏராளமான பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணை இன்னும் முடிவடையாததால் சம்பத் கமிஷனின் விசாரணை காலம் மேலும் 4 மாதத்துக்கு நீடிக்கப்பட்டு உள்ளது.இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications