முத்துலட்சுமி ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை வேண்டி அவனது மனைவி முத்துலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனுத் தாக்கல் செய்தார்.
முத்துலட்சுமி சார்பில் அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:
எனது கணவர் வீரப்பனை போலீஸார் திட்டமிட்டு சுட்டுக் கொன்று விட்டனர். அவரை உடலை பிரேத பரிசோதனைசெய்தபோது எங்களை உடனிருக்க அனுமதி மறுத்து விட்டனர்.
எனது கணவர் கொலை தொடர்பான ஆர்.டி.ஓ. விசாரணையில் நான் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளேன். எனது கணவரின்பிரேத பரிசோதனை அறிக்கையை நான் கேட்டபோது காவல்துறையினரும், மருத்துவ அதிகாரிகளும் தர மறுத்து விட்டனர்.
வீரப்பன் கொலையில் நீதி கேட்டு போராட எனக்கு அவரது பிரேத பரிசோதனை அறிக்கை தேவைப்படுகிறது. எனவேஅறிக்கையை எனக்கு அளிக்க மண்டல மருத்துவ அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு நாளை மறுதினம் விசாரணைக்கு வருகிறது.
மல்லூரில் குடியேறிய முத்துலட்சுமி:
வீரப்பன் மரணத்திற்குப் பின், மேட்டூர் டி.எம்.பி நகரில் உள்ள வீரப்பனின் அண்ணன் மாதையன் வீட்டில் முத்துலட்சுமி வசித்துவந்தார்.
வீரப்பன் கொல்லப்பட்ட பின்பு, தனது மகள்கள் இருவரையும் தனது நேரடி கண்காணிப்பில் வளர்க்க முத்துலட்சுமி முடிவுசெய்து, சேலத்தில் உள்ள பள்ளி நிர்வாகிகளை சந்தித்து இடம் கேட்டார். ஆனால் அங்கு இடம் கிடைக்கவில்லை.
இதையடுத்து ராசிபுரத்தில் உள்ள ஒரு பள்ளி நிர்வாகம் இடம் கொடுக்க முன் வந்து இருக்கிறது. இதையடுத்து விரைவில் தனது 2மகள்களையும் இந்த பள்ளியில் சேர்க்க முத்துலட்சுமி முடிவு செய்து உள்ளார்.
அதற்கு ஏதுவாக சேலம் அருகே உள்ள மல்லூரில் முத்துலட்சுமி குடியேறியுள்ளார்.
வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி கோவையிலும், இளைய மகள் பிரபா கடலூரிலும் தற்போது படித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications