போலீஸ் காவலில் ஜெயேந்திரர்: வருத்தத்தில் காஞ்சி மடம்
காஞ்சிபுரம்:
சங்கராச்சாரியாரை போலீஸ் காவலில் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது, பெரும் வருத்தத்தைத் தந்துள்ளதாக காஞ்சி மடம்தெரிவித்துள்ளது.
மடத்தின் முக்கிய நிர்வாகியும் செய்தித் தொடர்பாளருமான சங்கரன் நிருபர்களிடம் பேசுகையில், இந்த உத்தரவும் பெரும் வருத்தம்தந்துள்ளது. விரைவில் அவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். சுவாமிகளுக்காக கடவுளை வேண்டிக்கொள்கிறோம் என்றார்.
விஜயேந்திரர் பேட்டி:
இந் நிலையில் விஜயேந்திரர் அளித்துள்ள பேட்டியில்,
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட பிறகு, மடத்தில் வழக்கம்போல் பூஜைகள் நடக்கின்றன. தரிசனத்துக்காக பக்தர்கள்வருகின்றார்கள். மக்கள் சிறப்பு பிரார்த்தனைகளை அதிக அளவில் நடத்த வேண்டும்.
கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் குறித்து மக்கள் எந்த பயமும் கொள்ள வேண்டாம். நம்பிக்கையுடன் கடவுளைபிரார்த்தியுங்கள்.
விசுவ இந்து பரீஷத்தின் துணைத் தலைவர் வேதாந்தம், முன்னாள் மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி ஆகியோர்தரிசனத்துக்காகவே என்னை வந்து சந்தித்தனர். அதில் வேறு எந்த நோக்கமும் இல்லை.
இப்போது மடத்தில் மேலும் அதிக அளவில் தொண்டர்கள் சேர்க்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறேன். சுகாதாரம்,கல்வியில் தொண்டாற்ற இளைஞர்கள் வர வேண்டும். வேத பாடசாலையில் அதிக அளவில் சேர வேண்டும். சேர விரும்புவர்கள்மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றார்.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் ஜெயேந்திரருக்கு ஜாமீன் தர மறுத்தால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வீர்களா,ஜெயேந்திரரை தமிழக அரசு கைது செய்ததின் நோக்கம் என்ன, அவர் கைது செய்யப்பட்ட பிறகு அத்வானி உங்களுடன்பேசினாரா என்பதற்கு விஜயேந்திரர் கருத்து கூற மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications