போலீஸ் காவலில் விசாரிக்க 4 இடங்கள் தேர்வு
காஞ்சிபுரம்: ஜெயேந்திரரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 4 இடங்களை காவல்துறை தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிப்பது குறித்து காஞ்சிபுரம் நீதிபதி இன்று தீர்ப்பளிக்கிறார்.
காவலில் எடுக்க அனுமதி தரப்பட்டால், சங்கராச்சாரியாரை பாதுகாப்பான இடத்தில் வைத்து விசாரிக்க காவல்துறைதீர்மானித்துள்ளது.
இதற்காக மதுராந்தகம் ஏரிக்கரை அருகே உள்ள மலைப்பாளையம் நெடுஞ்சாலைத் துறை விடுதி, காஞ்சிபுரம் காவல் துறைஅலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம், போலீஸ் பயிற்சிப் பள்ளி கட்டடம், மாமல்லபுரம் பகுதியில்உள்ள தனி பங்களா ஆகியவற்றை போலீஸார் தேர்வு செய்து வைத்துள்ளனர்.
இந்த இடங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. ஜாங்கிட், எஸ்.பி.க்கள் டேவிட்சன், வரதராஜன்ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இப்போதைக்கு காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் சங்கராச்சாரியார் வைக்கப்பட்டிருந்தாலும், இந்த இடம்வெளியுலகுக்குத் தெரிந்துவிட்டதால், விரைவில் மேலே குறிப்பிட்ட வேறு 3 இடங்களில் ஒன்றுக்கு மாற்றப்படலாம் என்றுகூறப்படுகிறது.
விஜயேந்திரர் வரவில்லை:
இதற்கிடையே காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜெயேந்திரரை சந்திப்பதற்கு இளைவர் விஜயேந்திரரோ, சங்கர மட நிர்வாகிகளோயாரும் வரவில்லை.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு நான்கு நாள்களுக்குப் பிறகுதான் சங்கரமடத்திற்கு வந்தார்விஜயேந்திரர்.
இதற்கிடையே காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜெயேந்திரரை சந்தித்துப் பேசுவதற்கு அனுமதி அளிக்கக் கோரி விஜயேந்திரர் மனுத்தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் விஜயேந்திரர் காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவரது சார்பில் வேறுயாரும் மனுவும் தாக்கல் செய்யவில்லை.


Click it and Unblock the Notifications
