ஜெயேந்திரரின் கைது வீடியோ: நீதிபதி பார்த்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை உயர் நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிரமணியம் பார்த்தார்.

சங்கராச்சாரியார் கைதின்போது போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவரது தனி மனித உரிமையை மீறும் வகையில்செயல்பட்டதாகவும் சங்கராச்சாரியாரின் வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி குற்றம் சாட்டியுள்ளார். இதை மறுத்த அரசுத் தரப்பு கைதுசெய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை போட்டுக் காட்ட முன் வந்தது.

இந் நிலையில் சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பாலசுப்பிரமணியம் முன் நடந்தபோது, இந்தவீடியோவை போலீசார் போட்டுக் காட்டினர். இதை நிருபர்களும் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

10 நிமிடங்கள் ஓடிய அந்த வீடியோவில் ஜெயேந்திரர் இருந்த அறைக்குள் எஸ்.பி. பிரேம் குமார் தலைமையிலான போலீஸ்அதிகாரிகள் குழு வரும் காட்சி, அவரிடம் கைது குறித்து தகவல் தருவது, பதிலுக்கு ஜெயேந்திரர் கேள்விகள் எழுப்பும் காட்சி,பின்னர் தலையணைக்கு அடியே உள்ள செல்போனை எடுக்கும் காட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன.

போலீசார் கைது குறித்துக் கூறியவுடன், நான் வக்கீலோட பேசனும் என்கிறார் சங்கராச்சாரியார்.

உடனே போலீசார், சரி சாமி.. வக்கீலை கூப்பிடுங்க என்கின்றனர்.

இவ்வாறு வீடியோ போய்க் கொண்டிருந்தபோது, சங்கராச்சாரியாரின் வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி பக்கம் திரும்பிய நீதிபதிபாலசுப்பிரமணியம், தொடர்ந்து மேலும் வீடியோவை பார்க்க விரும்புகிறீர்களா என்று கேட்டார்.

அதற்கு ஜேத்மலானி, இதுவே போதும் என்றார்.

இதையடுத்து வீடியோவை ஆப் செய்யச் சொன்னார் நீதிபதி. இந்த வீடியோவைப் போட்டுக் காட்டுவதற்காக கோர்ட் ஹாலில் ஒருடிவி கொண்டு வந்து வைக்கப்பட்டது.

டிவி ஆப் செய்யப்பட்ட பின் பேசிய ஜேத்மலானி, இந்த வீடியோவின் காப்பி ஒன்று எனக்கு வேண்டும். சங்கராச்சாரியாரை நான்சந்திக்கும்போது அவரிடம் சில விஷயங்களை கிராஸ் செக் செய்ய எனக்கு இது தேவைப்படுகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+