சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. சங்கராச்சாரியாரின் சார்பில், மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜராகி வாதாடினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்பிமணியம், தேதி ஏதும் குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார்.
இந் நிலையில் இன்று மாலை இந்த மனு மீது தனது தீர்ப்பை வழங்கினார். தனது தீர்ப்பில், இப்போதுதான் சங்கராச்சாரியார் மீதானவழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந் நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடிசெய்தார்.












Click it and Unblock the Notifications