மாட்டு பாஸ்கருக்கு போலீஸ் காவல் மறுப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாட்டு பாஸ்கர், சில்வர் ஸ்டார் ஆகியோரை போலீஸ் காவலில் அனுப்பகாஞ்சிபுரம் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் மாட்டு பாஸ்கர் மற்றும்சில்வர் ஸ்டார் (எ) ஸ்டாலின் இருவரும் கடந்த 5ம் தேதி சரண் அடைந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.
காவல் நீடிப்புக்காக காஞ்சிபுரத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கபோலீஸ் தரப்பில் மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில்,
கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வது தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தவேண்டியுள்ளது. எனவே, இரண்டு பேரையும் போலீஸ் காவலில் 5 நாட்கள் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது.
இதற்கு, நீதிமன்றக் காவலில் அடைத்து 15 நாட்கள் முடிந்து விட்டதால் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கக் கூடாது என்று மாட்டுபாஸ்கரின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி உத்தமராஜ், போலீஸாரின் மனுவை நிராகரித்ததோடு, மாட்டு பாஸ்கர்மற்றும் சில்வர் ஸ்டாரின் நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்களுக்கு நீடித்தார்.












Click it and Unblock the Notifications