தமிழக அரசு மீது மத்திய அரசு அதிருப்தி
டெல்லி:
கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட விஷயத்தில் தமிழக அரசின் போக்கு குறித்து மத்திய அரசுஎரிச்சலடைந்துள்ளது.
அவரைக் கைது செய்ததற்காக காரணங்கள் என்ற பெயரில் மத்திய உள்துறைக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமிபிரானேஷ் அனுப்பி வைத்த அறிக்கை முழு சொத்தபல் என்கிறார்கள்.
இந்த அறிக்கையில் போதிய விவரங்கள் என்று கருதும் மத்திய உள்துறை, முழு விவரங்களையும் உடனே அனுப்பி வைக்குமாறுதமிழக தலைமைச் செயலாளருக்கும் உள்துறைச் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளது.
சங்கராச்சாரியாரிடம் விசாரணையே நடத்தாமல் அவரைக் கைது செய்வதிலும், உள்ளே தள்ளுவதிலும், பின்னர் போலீஸ்காவலில் எடுப்பதிலுமே தமிழக அரசு அதிக அக்கறை காட்டியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கருதுகின்றனர்.
மேலும் இந்த விஷயத்தில் மத்திய அரசின் மெளனம், மக்களிடையே தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், அதிமுகஅரசை மத்திய அரசு ஆதரிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளாகவும் மத்திய உளவுப் பிரிவும் உள்துறையிடம்ரிப்போர்ட் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications