ஜெயேந்திரருக்கு எதிராக கொடி தூக்கும் சங்கராச்சாரியார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியார், இந்து மதத்தின் பெருமையைக் காப்பாற்றும் வகையில் பீடாதிபதிபதவியைத் துறக்க வேண்டும் என்று பிரயாக் சங்கர மடத்தின் பீடாதிபதி சுவாமி மாதவானந்த சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள்கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

தாம் வகித்துவரும் பதவியின் மதிப்பையும் கண்ணியத்தையும் காப்பாற்ற ஜெயேந்திரர் பதவி விலக வேண்டும். அவர் அவ்வாறுசெய்தால் தான் இந்து மதத்தின் பெருமை காப்பாற்றப்படும்.

தமிழக அரசு ஜெயேந்திரரை மடத்திலேயே அவரை சிறை வைத்திருக்கலாம். கைது செய்திருக்கக் கூடாது. சங்கராச்சாரியார்போன்ற மதத் தலைவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும். பிரதமர், குடியரசுத் தலைவர்ஆகியோருக்கு இணையான மதிப்பை மதத் தலைவர்களுக்கு வழங்க வேண்டும்.

ஜெயேந்திரர் கைதை வைத்து அரசியல் ஆதாயம் தேட அரசியல் கட்சிகள் முயல்கின்றன. இந்து மதத்தின் நலனுக்காக அவர்கள்செயல்படவில்லை.

மத நிறுவனங்களின் வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். நிதி நெருக்கடியில் இருக்கும் மத நிறுவனங்களுக்கு அரசுநிதி வழங்க வேண்டும் என்றார் சங்கராச்சாரியார் மாதவானந்த சரஸ்வதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+