ஜெயேந்திரரிடம் 2வது நாளாக எஸ்.பி. விசாரணை

Subscribe to Oneindia Tamil

காஞ்சி:

Jayandrarசங்கராச்சாரியாரிடம் இன்று இரண்டாவது நாளாக எஸ்.பி. சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

நேற்று போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்ட சங்கராச்சாரியார் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் உள்ளமகளிர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

நேற்று மாலை அவரை அவரது வழக்கறிஞர் சந்திக்க போலீசார் அனுமதி தந்தனர். வேறு யாரையும் அவரைச் சந்திக்கஅனுமதிக்கவில்லை.

இன்று காலை பூஜைகள் செய்ய அவர் கேட்ட புஷ்பங்களும் பழங்களும் போலீசாரால் வாங்கித் தரப்பட்டன. குளிக்க வென்னீரும்அளிக்கப்பட்டது.

அவரிடம் எஸ்.பி. சக்திவேல் தலைமையிலான போலீசார் நேற்று பகல் 2 மணியில் இருந்து இரவு 7 மணி வரை விசாரணைநடத்தினர். இன்று காலை 8 மணிக்கே மீண்டும் விசாரணையை ஆரம்பித்துவிட்டனர்.

சங்கரராமன் தனது மொட்டை பெட்டிசன்களில் சங்கர மடம் குறித்து கூறியுள்ள குற்றச்சாட்டுகள், கூலிப் படைத் தலைவர்அப்புவுடனான சங்கராச்சாரியாரின் தொடர்பு, கூலிப் படைக்குப் பணம் தரப்பட்டது, கொலையாளிகளுடன் தொலைபேசியில்பேசியது உள்பட பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான கேள்விகளுக்கு சங்கராச்சாரியார் பதிலே சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஒட்டுமொத்தவிசாரணையையும் போலீசார் வீடியோவிலும் பதிவு செய்து வருகின்றனர். திங்கள்கிழமை காலை வரை இந்த விசாரணைநடக்கும். அன்றைய தினம் அவர் காஞ்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுவார்.

சங்கராச்சாரியார் தங்க வைக்கப்பட்டுள்ள மகளிர் காவல் நிலையத்தைச் சுற்றி ஆயுதம் தாங்கிய கமாண்டோ போலீசார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சங்கராச்சாரியார் தரும் விவரங்களை வைத்து சில இடங்களில் அதிரடி போலீஸ் சோதனைகள் நடக்கலாம் என்றும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+