முரசொலி மாறன் நினைவு தினம்
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முதலாமாண்டு நினைவு தினம் வருகிற 23ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மனசாட்சி என்று வர்ணிக்கப்பட்டுவருமான முரசொலி மாறன்கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி மரணமடைந்தார்.
அவரது முதலாமாண்டு நினைவு தினத்தை திமுகவினர் வரும் 23ம் தேதி அனுசரிக்கவுள்ளனர். சென்னை அண்ணாஅறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், துணைப் பொதுச்செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவிக்கிறார்கள்.
அன்று மாலை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நினைவு நாள் கூட்டம் நடக்கிறது. இதில் கருணாநிதி, அன்பழகன்,ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், பாமக தலைவர் ஜி.கே.மணி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், மதிமுகஅவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.












Click it and Unblock the Notifications