சேது திட்டத்துக்கு எதிராக வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனு இன்று நீதிபதி கற்பகவிநாயகம், நீதிபதிதணிகாச்சலம் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பிரகாஷ், மத்திய அரசின் சார்பில் கோபாலன், வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது சேதுசமுத்திரத் திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று பிரகாஷ் கோரினார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications