அத்வானிக்கு தடை விதிக்க திருமாவளவன் கோரிக்கை
சென்னை & வேலூர்:
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னையில் வரும் திங்கள்கிழமை பா.ஜ.க. தலைவர் அத்வானி நடத்தவுள்ளபோராட்டத்துக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த மக்களவைத் தேர்தலில் பொறுப்பான பா.ஜ.க. தலைவராக சங்கராச்சாரியார் செயல்பட்டதாக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்தக் கைது நடவடிக்கை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலை வெளிப்படுத்தினாலும், இந்த நடவடிக்கைபாராட்டுக்குரியதல்ல. ஏனெனில், ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்தபோது நடவடிக்கைஏதும் எடுக்கவில்லை இந்த அரசு.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தேர்தல்களைத் தடுப்பவர்கள் யார் என்று அடையாளம் தெரிந்தும் அவர்கள் மீது இந்தஅரசு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சங்கராச்சாரியார் கைதை தனிப்பட்ட இரு அதிகார மையங்களுக்கு இடையே நடந்த மோதலாகவே கருதுகிறேன். இந்தக்கைதுக்கு மதச் சாயம் பூசி, அரசியலாக்க முயல்கிறார் அத்வானி. மதமோதலைத் தூண்டிவிட நினைக்கும் அத்வானிக்குசென்னையில் போராட்டம் நடத்த அரசு அனுமதி தரக் கூடாது. அந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
அதே போல சாதியத்தை பாதுகாக்கும் சங்கர மடத்தை அரசு முடக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.
ராமதாஸ் பேட்டி:
இந் நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேலூரில் நிருபர்களிடம் பேசுகையில்,
கொலை வழக்கில் கைதாகியிருக்கிறார் சங்கராச்சாரியார். இந்த விஷயத்தில் அவரை குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கவேண்டியது அதிமுக அரசின் கடமை. தான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டியது சங்கராச்சாரியாரின் கடமை.
இந் நிலையில் இந்த வழக்கில் பாஜக போன்றவர்கள் தலையிடுவதோ, மத உணர்வுகளைத் தூண்டிவிடுவதோ, பிரச்சனையை திசைதிருப்புவதோ சரியல்ல.
கடந்த மக்களவைத் தேர்தலில் பொறுப்பான பா.ஜ.க. தலைவராக சங்கராச்சாரியார் செயல்பட்டார். பா.ஜ.க. தேர்தல்அலுவலகத்தை தனது புனிதக் கரங்களால் திறந்து வைத்தார். பா.ஜ.க. வேட்பாளர்களையும் தேர்வு செய்தார். பல கட்சிகளில்இருந்தும் பா.ஜ.கவுக்கு வேலை பார்க்க ஆட்களை இழுத்தார்.
அதற்கு நன்றிக்கடனாகவே பா.ஜ.க. இப்போது அவருக்காக போராடுகிறது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications